2025 கடைசியில் புதன் பகவான் உருவாக்கும் சிறப்பு ராஜயோகம்.! இந்த ராசிகளுக்கு கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரப்போகுது.!

Published : Dec 28, 2025, 10:26 AM IST

Budhan Peyarchi Dashank Yog 2025: 2025 ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் புதன் பகவான் எமனுடன் இணைந்து தசாங்க யோகத்தை உருவாக்க இருக்கிறார். இதனால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
14
தசாங்க யோகம் 2025

வேத ஜோதிடத்தில் புதன் பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். அவர் பேச்சு, படிப்பு, வணிகம், புத்திசாலித்தனம், வியாபாரம் ஆகியவற்றின் காரகராக விளங்கி வருகிறார். இவர் சந்திர பகவானுக்கு அடுத்தபடியாக குறுகிய கால இடைவெளியில் தனது ராசியை மாற்றிக் கொண்டே இருக்கிறார். அந்த வகையில் டிசம்பர் 29ஆம் தேதி குரு பகவானின் சொந்த வீடான தனுசு ராசிக்குள் நுழைகிறார்.

டிசம்பர் 30ஆம் தேதி அவர் மகர ராசியில் பயணித்து வரும் எமனுடன் 36 டிகிரி இடைவெளியில் அமைந்து தசாங்க யோகத்தை உருவாக்குகிறார். ஜோதிடத்தில் தசாங்க யோகம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சுமார் 17 ஆண்டுகளுக்கு பின்னர் புதன் மற்றும் எமன் இருவரும் இணைந்து உருவாக்கும் தசாங்க யோகத்தால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அந்த ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

24
தனுசு

தசாங்க யோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கவுள்ளது. இந்த யோகத்தின் விளைவு புத்தாண்டின் முதல் சில வாரங்களுக்கு வெளிப்படும். புதன் பகவான் தனுசு ராசிக்காரர்களுக்கு அறிவு சார்ந்த விஷயங்களில் வெற்றியைத் தருவார். வணிகத்தில் அவர்கள் நல்ல லாபத்தைப் பெற இருக்கின்றனர். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகளை முடித்து வெற்றிகளைக் குவிப்பார்கள். 

பல வழிகளில் சிக்கி இருந்த பணம் மீண்டும் கைக்கு கிடைக்கும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்கள் அல்லது லாபத்தைப் பெறுவார்கள். விவசாயிகளுக்கும் இந்த காலகட்டம் சிறப்பான பலன்களைக் கொடுக்கும். சொந்தமாக தொழில் செய்து வருபவர்கள் எதிர்பாராத லாபம் பெறுவார்கள். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைக்கும் சூழல் உருவாகும்.

34
மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் தசாங்க யோகத்தால் நேர்மறையான பலன்களை அனுபவிப்பார்கள். அவர்களின் ஆளுமைத் திறன், புத்திசாலித்தனம் மேம்படும். கொடுத்த வேலைகளை சிறப்பாக முடித்து முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஐடி, ஊடகம், மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு புத்தாண்டு மிகவும் சிறப்பானதாக அமையும். எதிர்பாராத பணவரவு, திடீர் நிதி ஆதாயம் ஆகியவற்றை அனுபவிக்கலாம். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். 

சிறிதாக தொழில் தொடங்கி வருபவர்கள் பெரிய அளவில் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். வேலை விஷயமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உருவாகலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை தாமதமாகி வருபவர்களுக்கு புத்தாண்டின் தொடக்கத்தில் நல்ல செய்திகள் கைக்கு வந்து சேரலாம்.

44
கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் தசாங்க யோகத்தின் விளைவாக வாழ்க்கையில் அனைத்து கட்டத்திலும் மிகப்பெரிய மாற்றங்களை சந்திக்க உள்ளனர். நீண்ட காலமாக தேவையில்லாமல் ஏற்பட்டு வந்த செலவுகள் குறையத் தொடங்கும். பணத்தை சேமிக்கத் தொடங்குவீர்கள். பொன், பொருள், ஆபரணம் ஆகியவை சேரும். வங்கி இருப்பு உயரும். ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். 

கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தவர்கள் அதிலிருந்து முழுமையாக விடுபடுவீர்கள். சொந்தமாக தொழில் செய்து வருபவர்கள் பன்மடங்கு லாபத்தைப் பெறுவீர்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஒட்டுமொத்தமாக புத்தாண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை வழங்க இருக்கிறது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories