Birth Month : பெண்களே! இந்த 3 மாசத்துல பிறந்த பையன பார்த்து கல்யாணம் பண்ணுங்க.. உங்கள தங்கம் மாதிரி பார்த்துப்பாங்க

Published : Nov 07, 2025, 07:05 PM IST

ஜோதிடத்தின்படி சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்த ஆண்கள் தங்கள் மனைவிக்கு சிறந்த கணவராக இருப்பார்களாம். அது எந்தெந்த மாதம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
14
Best Husband By Birth Month

நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உண்டு. அதை பிறந்த தேதி, பிறந்த மாதம் மற்றும் பிறந்த நேரம் ஆகியவற்றை வைத்து கணித்து விடலாம் என்று ஜோதிடம் கூறுகிறது. அந்த வகையில் பெண்களே, உங்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவு,ம் இனிமையாகவும் இருக்க வேண்டுமென்றால் இந்த 3 மாதங்களில் பிறந்த ஆண்களை திருமணம் செய்யுங்கள் என்று ஜோதிடம் கூறுகிறது. ஏனெனில் இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் சிறந்த கணவராக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. அது எந்தெந்த மாதம் என்று இப்போது இங்கு பார்க்கலாம்.

24
மார்ச் :

ஜோதிடத்தின் படி, மார்ச் மாதத்தில் பிறந்த ஆண்கள் நீங்கள் நம்ப முடியாத அளவிற்கு உங்களுக்கு நம்பிக்கையாக இருப்பார்கள். பிறர் பேசும் வார்த்தைகளை பொறுமையுடன் கேட்கும் பழக்கம் இந்த மாதத்தில் பிறந்த ஆண்களுக்கு உண்டு. அதிலும் குறிப்பாக தனது மனைவி பேசும் போது அவளது எண்ணத்தை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்ளும் சிறந்த கணவராக இருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் தங்களது துணையின் தேவைகளை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். எவ்வளவு கஷ்டமானாலும் மனைவி மீது கோபப்பட மாட்டார்கள். ரொம்பவே மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று ஜோதிடம் கூறுகிறது.

34
ஜூன் :

ஜோதிடத்தின்படி, ஜூன் மாதத்தில் பிறந்த ஆண்கள் இயற்கையாகவே ரொம்பவே மகிழ்ச்சியான குணம் கொண்டவர்கள். மேலும் இரக்க குணம் இந்த மாதத்தில் பிறந்த ஆண்களிடம் அதிகமாகவே உண்டு. இவர்கள் எளிதில் பிறரது மனதை ஒருபோதும் புண்படுத்த மாட்டார்கள். இவர்கள் திருமணம் செய்யும் பெண்ணை ஒரு போதும் துணையின் தேவையை புரிந்து கொண்டு அதன்படி வாழ்க்கையை வாழ்வார்கள்.

44
ஆகஸ்ட் :

ஜோதிடத்தின்படி ஆகஸ்ட் மாதம் பிறந்த ஆண்கள் சிறந்த கணவர்கள். ஏனெனில் இயற்கையாகவே இவர்கள் பிறரிடம் நஞ்சு உள்ளவர்களாக இருக்கும் குணம் உண்டு. எந்தவொரு சூழ்நிலையிலும், மனைவிக்கு துரோகம் செய்ய நினைக்க மாட்டார்கள். எனவே தயக்கமின்றி இந்த மாதத்தில் பிறந்த ஆண்களை பெண்கள் திருமணம் செய்யலாம். இவர்கள் ஒருபோதும் பொய் சொல்ல மாட்டார்கள். இவர்களிடம் ரகசியம் ஏதும் இல்லை. குறிப்பாக துணையின் தேவைகளை சொல்லாமலேயே புரிந்து கொண்டு அதை நிறைவேற்றும் குணம் இவர்களுக்கு உண்டு. முக்கியமாக இவர்கள் தங்கள் மனைவியிடம் ரொமாண்டிக்காக நடந்து கொள்வார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories