Nov 08 Rasi Palan: துலாம் ராசி நேயர்களே, பல பிரச்சனைகள் வந்து சேரும்.! நிதானம் தேவை.!

Published : Nov 07, 2025, 05:20 PM IST

Nov 08 Thulam Rasi Palan : நவம்பர் 08, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
நவம்பர் 08, 2025 துலாம் ராசிக்கான பலன்கள்:

துலாம் ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்கள் செயல்களில் தடைகள், குழப்பங்கள், மனச்சோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உடன் பணிபுரிபவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

நிதி நிலைமை:

பெரிய முதலீடுகளை செய்யவோ, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவோ இன்றைய நாள் உகந்ததாக இல்லை. எதிர்பாராத வழிகளில் பணவரவு இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பணம் திரும்பி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்பத்தில் உள்ளவர்களுடன் நிதானமாக பேசி பழகுவது அவசியம். வாழ்க்கைத் துணையுடன் சிறு மன வருத்தங்கள் வரலாம். எனவே மனம் விட்டு பேசுவது நல்லது. வீட்டில் உள்ள முதியவர்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். நாள்பட்ட நோய் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும்.

பரிகாரங்கள்:

அம்மன் சன்னதிகளில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். நரசிம்மருக்கு பானகம் சமர்ப்பித்து வணங்குவது பிரச்சனைகளை நீக்க உதவும். மனக்குழப்பம் நீங்க சிவனை வழிபடலாம். இயலாதவர்கள், ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வணங்குவது சிறப்பு.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories