மீன ராசி நேயர்களே, இன்றைய நாள் பொறுமையும், நிதானமும் தேவைப்படும் நாளாக இருக்கலாம். உணர்ச்சிவசப்பட்டு முடிவுகள் எடுப்பதை தவிர்த்து நடைமுறை சிந்தனையுடன் செயல்படுவது நல்லது. இந்த வாரம் உங்கள் படைப்பாற்றல் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். அமைதி காப்பது வெற்றியைத் தரும். அனுபவசாலிகளின் ஆலோசனை உங்களுக்கு பெரிய அளவில் முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
நிதி நிலைமை:
நிதிநிலைமை இன்று சீராக இருக்கும். வியாபாரம் மற்றும் உத்தியோகத்திலிருந்து பணவரவு சாதகமானதாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. நிதி திட்டமிடலில் கவனம் தேவை. இல்லையெனில் கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். எதிர்பார்த்திருந்த பணம் வந்து சேர வாய்ப்பு உள்ளது. மாமனார் மாமியார் வழியில் ஆதரவு கிடைக்கலாம்
தனிப்பட்ட வாழ்க்கை:
காதல் துணையிடம் அமைதி காப்பது நல்லது. நிதானமான உரையாடல் மூலம் பிணைப்பு ஆழமடையும். குடும்ப உறவுகளுக்கு இடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். அமைதியாக இருப்பது நல்லது. கடந்த கால விஷயங்களில் இருந்து விலகி இருப்பது அமைதியை பாதுகாக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களை நம்பிக்கையை வலுப்படுத்திக் கொள்ள சிறந்த நாளாகும்.
பரிகாரங்கள்:
மதுரை மீனாட்சி அம்மன் அல்லது உங்கள் இஷ்ட தெய்வத்தை மனதார வழிபட வேண்டும். சிவலிங்கத்திற்கு வில்வ இலைகள் படைத்து வழிபடலாம். கோ சாலைகளுக்கு பசுந்தீவனங்கள் வாங்கி கொடுக்கலாம். இயலாதவர்கள் ஏழை எளியவர்களுக்கு கோதுமை தானம் அளிப்பது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.