Chanakya Niti: இந்த 5 வகையான பெண்களை ஆண்கள் தவிர்த்து விடுங்கள்.! இல்லெயெனில் மானம், மரியாதை எல்லாம் போயிடும்.!

Published : Nov 03, 2025, 03:31 PM IST

According to chanakya niti women that men should avoid: இந்திய வரலாற்றில் நீதிமானாக விளங்கிய சாணக்கியர் ஆண்கள் சில குணங்களை கொண்ட பெண்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
சாணக்கிய நீதிப்படி தவிர்க்க வேண்டிய பெண்கள்

இந்திய வரலாற்றில் சாணக்கியர் மிகப் பெரும் அறிஞராக திகழ்ந்தவர். அவர் சிறந்த ஆட்சியாளராகவும், ராஜதந்திரியாகவும், அரசியல் தத்துவங்களை கொடுத்த ஞானியாகவும் விளங்குகிறார். இவர் ஒருவர் தன் வாழ்விலும், குடும்பத்திலும், சமூகத்திலும் செம்மையாக வாழ பின்பற்ற வேண்டிய முக்கிய அறங்கள் குறித்து விளக்கி இருக்கிறார். 

அதில் ஆண்கள் எந்த வகையான பெண்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்கிற ஆலோசனைகளும் உண்டு. சாணக்கிய நீதிப்படி பின்வரும் குணாதிசயங்கள் கொண்ட பெண்களிடமிருந்து ஆண்கள் விலகி இருப்பது நன்மைகளை தரும். அது குறித்து இங்கு காணலாம்.

1.ஒழுக்கமற்றவர்கள்

சாணக்கியர் அறம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். ஒரு பெண்ணுக்கு நற்பண்புகள், நேர்மை, குடும்பப் பற்று இல்லையெனில் அவளுடன் பழகுவது ஆண்களின் புகழுக்கும், மன அமைதிக்கும் கேடு விளைவிக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார். இத்தகையவர்களுடன் தொடர்பு கொள்வது குடும்பத்தில் குழப்பங்கள், சமூகத்தில் அவமானம், தனிப்பட்ட வாழ்க்கையில் துரோகம் ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று சாணக்கியர் எச்சரிக்கிறார்.

2.பேராசை கொண்டவர்கள்

பொருள் மீது அளவுக்கு அதிகமான ஆசை கொண்ட பெண்களிடமிருந்து ஆண்கள் விலகிவிட வேண்டும் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார். தன் தேவைக்காகவோ அல்லது ஆடம்பரத்திற்காகவோ ஆண்களை சார்ந்து இருக்கும் பெண்கள் ஆபத்தானவர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். இவர்களின் தேவைகள் முடிவடையாதவையாக இருக்கும். 

இதன் காரணமாக ஒருவன் தன் செல்வத்தை விரைவாக இழக்க நேரிடும். பணத்திற்காக நேர்மையற்ற வழிகளைப் பின்பற்றவும் நிர்பந்திக்கப்படலாம். எனவே பேராசை கொண்ட பெண்களிடமிருந்து தள்ளி இருக்க சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.

3.அதிக கோபம் கொண்டவர்கள்

அதிக கோபத்துடனும், கடுமையான வார்த்தைகளுடனும் பேசும் பெண்கள் வீட்டின் அமைதியையும் சந்தோஷத்தையும் தொலைத்து விடுவார்கள். அவர்களுடைய கட்டுக்கடங்காத பேச்சு குடும்பத்தில் சண்டைகளையும், மனக்கசப்பையும் உருவாக்கும். தொடர்ச்சியான சண்டைகள் மன அழுத்தம் மற்றும் வீட்டில் நிம்மதி இழப்பை ஏற்படுத்தி விடும். எனவே இத்தகைய பெண்களிடமிருந்து விலகி இருக்க சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.

4. பொறுமையற்றவர்கள்/சோம்பேறிகள்

அதேபோல் பொறுமையின்மை அல்லது வீட்டுக் கடமைகளை சரியாக செய்யாத சோம்பேறித்தனம் மிக்கவர்கள் குடும்பத்தின் முன்னேற்றத்தை தடுப்பவர்கள் என்றும், இவர்களால் குடும்பத்தின் நிர்வாகம் சீர்குலைந்து நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இத்தகைய பெண்களையும் தவிர்க்க சாணக்கியர் கூறுகிறார்.

5. அவசர கதியில் முடிவெடிப்பவர்கள்

எதையும் முன்கூட்டி யோசிக்காமல் அல்லது பெரியவர்களின் ஆலோசனையை காது கொடுத்து கேளாமல் அவசர கதியில் முடிவெடுக்கும் பெண்கள் பல சமயங்களில் தவறான பாதையை தேர்ந்தெடுத்து குடும்பத்தையே ஆபத்தில் தள்ளுவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். இவர்களின் தவறான முடிவுகளின் விளைவுகளை கணவன் மற்றும் கணவனின் குடும்பம் அனுபவிக்க நேரிடலாம் என்பதால் இத்தகைய பெண்களை ஆபத்தானவர்களாக சாணக்கியர் வரையறுக்கிறார்.

6. பிறரைப் பற்றி குறை கூறுபவர்கள்

மேலும் எப்போதும் பிறரைப் பற்றி குறை கூறுவது, புறம் பேசுவது, அடுத்தவர் விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவது போன்ற செயல்கள் வீட்டில் அமைதியற்ற சூழலை உருவாக்குவதுடன், உறவுகளுக்கிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதால் இத்தகைய குணங்கள் கொண்ட பெண்களையும் தவிர்க்க சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.

கவனிக்க வேண்டியவை

சாணக்கியரின் அறிவுரையானது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் பிறப்பைக் காட்டிலும், அவர்களின் நடத்தை முக்கியமானது என்பதை வலியுறுத்துகிறது. மேலே குறிப்பிடப்பட்ட குணாதிசயங்கள் கொண்ட பெண்கள் ஒரு ஆணின் வாழ்க்கையில் அமைதி, செல்வம் மற்றும் நற்பெயர் ஆகிய மூன்றையும் அழித்துவிடும் அபாயத்துடன் இருப்பவர்களாக சாணக்கியர் கூறுகிறார். 

இவர்களின் தொடர்புகளை ஆரம்பத்திலேயே தவிர்ப்பது ‘தற்காப்பு’ என அவர் கூறுகிறார். இந்த ஆலோசனைகள் ஆண் பெண் உறவுகளில் மட்டுமல்லாமல் எந்த ஒரு ஆழமான தொடர்புகளிலும் நாம் கவனிக்க வேண்டிய தனிப்பட்ட குணாதிசயங்கள் என்று சாணக்கியர் தனது நீதியில் குறிப்பிடுகிறார்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories