Nov 13 Rasi Palan: மீன ராசி நேயர்களே, இன்று தொழிலில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும்.!

Published : Nov 12, 2025, 04:06 PM IST

Nov 13 Meena Rasi Palan: நவம்பர் 13, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
நவம்பர் 13, 2025 மீன ராசிக்கான பலன்கள்:

மீன ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு திருப்தி அளிக்கக்கூடிய நாளாக இருக்கும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். உங்களின் முயற்சிக்கு அங்கீகாரம், பாராட்டு மற்றும் வெற்றி கிடைக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள் ஆகும்.

நிதி நிலைமை:

இன்றைய நாள் நிதி நிலைமை சீராக இருக்கும். பணவரவில் எந்த குறைவும் இருக்காத. நிதி சார்ந்த விஷயங்களில் புத்திசாலித்தனமான நகர்வுகளுக்கு சாதகமான நாளாகும். செலவு செய்வதில் அதிக தாராளம் காட்டக்கூடாது. நிதி விஷயங்களில் அவசர முடிவுகளைத் தவிர்த்து நிதானமாக செயல்படுவது நல்லது.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்று குடும்ப உறவுகளில் நல்லிணக்கம் காணப்படும். திருமணமானவர்கள் மன நிறைவாக உணர்வீர்கள். தனிமையில் உள்ளவர்கள் மனதிற்கு பிடித்த நபரை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம். குடும்ப உறவுகள் பலப்படும். காதல் உறவில் இருப்பவர்கள் நெருக்கத்தையும் இதயபூர்வமான தருணங்களையும் உணர்வீர்கள். சமூக நிகழ்வுகளில் பங்கேற்பது பிரிந்திருக்கும் உறவுகளை மீண்டும் இணைக்கும்.

பரிகாரங்கள்:

குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்வது யோகத்தை பெற்றுத் தரும். மாணவர்களின் கல்வி சார்ந்த விஷயங்கள் மேம்பட ஹயக்ரீவரை வழிபடுவது நன்மை தரும். இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories