Spiritual: நடு இரவில் வீட்டின் முன்பு நாய் குரைப்பது துரதிர்ஷ்டமா? கெட்ட சகுனமா? சாஸ்திரம் கூறுவது என்ன?

Published : Nov 12, 2025, 03:10 PM IST

இந்து மத கலாச்சாரத்தின் படி விலங்குகளின் நடத்தைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பூனை குறுக்கே வருவது, இரவில் நாய் குரைப்பது போன்றவை வரவிருக்கும் சுப அல்லது அசுப நிகழ்வுகளின் முன்னறிவிப்பாக பார்க்கப்படுகிறது.

PREV
இரவில் வீட்டின் முன்பு நாய் குரைப்பது துரதிர்ஷ்டமா?

நமது நாட்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாய்கள் குரைப்பது என்பது அன்றாட வாழ்க்கையில் நாம் கேட்கும் ஒரு பொதுவான சத்தம் என்றாலும், இரவு நேரத்தில் வீட்டின் வாசலில் நாய் குரைப்பது, ஊளையிடுவது ஆகியவை குறித்து மத நூல்களிலும், சகுன சாஸ்திரத்திலும் ஆழமான நம்பிக்கைகளும், மாறுபட்ட விளக்கங்களும் உள்ளன. 

நாய் என்பது மனிதனுக்கு செல்லப்பிராணியாக இருந்தாலும் அதன் சில செயல்பாடுகளை சகுன சாஸ்திரம் வரவிருக்கும் சுப அல்லது அசுப நிகழ்வுகளின் முன்னறிவிப்பாக பார்க்கிறது.

சகுன சாஸ்திரத்தில் நாய்களுக்கு உள்ள முக்கியத்துவம்

விலங்குகள் மற்றும் பறவைகளின் செயல்கள் தெய்வீக தன்மையுடன் தொடர்பு கொண்டவை. குறிப்பாக நாய்கள் மனிதர்களால் உணர முடியாத ஆற்றல்கள் மற்றும் ஆன்மாக்களை உணரும் திறன் கொண்டவை என்று நம்பப்படுகிறது. இந்து மதத்தில் நாய்கள் நேரடியாக மரணத்தின் கடவுளாக விளங்கும் எமதர்மன் உடனும், சிவபெருமானின் உக்கிர வடிவமான கால பைரவருடனும் தொடர்புடையதாக கருதப்படுகிறது. 

மகாபாரதத்தில் தர்மன் சொர்க்கத்திற்கு செல்லும் பொழுது அவருடன் ஒரு நாய் வந்ததாகவும் இதனால் விசுவாசம் மற்றும் தர்மத்தின் அடையாளமாகவும் நாய்கள் விளங்கி வருகிறது.

துரதிர்ஷடத்தின் அடையாளம்

இரவு நேரத்தில் குறிப்பாக நள்ளிரவில் நாய்கள் வீட்டில் முன் நின்று குரைப்பது குறித்து சகுன சாஸ்திரம் சில விளக்கங்களை கூறுகிறது. வீட்டின் முன்பு நாய் குரைப்பதை பெரும்பாலும் துரதிஷ்டத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது. 

நள்ளிரவில் ஒரு நாய் ஒரு வீட்டை பார்த்து குரைப்பது அல்லது ஊளையிடுவது என்பது அந்த வீடு அல்லது அருகில் உள்ள வீடுகளில் பெரிய துக்கம் அல்லது மரணம் நிகழப்போகிறது என்பதன் அறிகுறி என்று சகுன சாஸ்திரம் கூறுகிறது. மனிதர்களுக்கு தெரியாத எதிர்மறை ஆற்றுதல் அல்லது ஆன்மாக்களை நாய் உணர்ந்து எச்சரிப்பதற்காகவே குரைக்கிறது என்று கூறப்படுகிறது.

ஆபத்துக்களுக்கான எச்சரிக்கை

நாய் குரைப்பது என்பது அந்த இடத்தில் எதிர்மறை சக்திகளின் நடமாட்டம் இருப்பது அல்லது தீய சக்திகளின் இருப்பை சுட்டிக்காட்டுகிறது. இதன் காரணமாக வீட்டின் சுபத் தன்மை பாதிக்கப்படலாம். நாய் குரைப்பது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிர்பாராத நோய்கள் அல்லது பெரிய நிதி சார்ந்த இழப்புகள் ஏற்படலாம் என்பதற்கான எச்சரிக்கையாகவும் இருக்கிறது. 

தொடர்ந்து நள்ளிரவில் நாய் குரைப்பது திருடர்கள் வீட்டைச் சுற்றி இருக்கலாம் இயற்கையான எச்சரிக்கையாகவும் இருக்கலாம் அல்லது அந்த இடத்தில் மறைந்திருக்கும் விஷப்பூச்சிகள், பாம்புகள் அல்லது வேறு ஏதேனும் ஆபத்துகள் இருப்பதற்கான எச்சரிக்கையாகவும் இருக்கலாம்.

அறிவியல் காரணங்கள்

ஆன்மீக ரீதியாக இந்த காரணங்கள் கூறப்பட்டாலும் அறிவியல் ரீதியாக வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தனிமை, வலி அல்லது தூரத்தில் இருக்கும் மற்றொரு நாயின் சத்தத்திற்கு பதில் அளிக்கும் வகையில் இருக்கலாம் என்று அறிவியல் கூறுகிறது. 

ஒரு நாய் திடீரென குரைத்தால் அது பயந்து போவது, திடீரென சத்தம் கேட்பது, பூனை அல்லது சிறிய விலங்கை பார்த்து கத்துவது, புதிய வாசனையை உணர்வதாக இருக்கலாம். வீட்டு வாசலில் குரைப்பதற்கான காரணம் தன் எல்லைக்குள் மற்ற நாய் அல்லது மனித நடமாட்டத்தை கண்டதாக இருக்கலாம் என்று அறிவியல் கூறுகிறது.

பரிகாரங்கள்

சகுன சாஸ்திரத்தின் படி ஆன்மீக ரீதியாக நாய் குரைப்பது துரதிஷ்டமாக பார்க்கப்பட்டாலும், பெரும்பாலான நேரங்களில் நாய் குரைப்பது என்பது அதன் உள்ளுணர்வு, பயம் அல்லது எல்லையை பாதுகாப்பதற்கான இயல்பான செயல்பாடுகளுக்காக மட்டுமே. இருப்பினும் நாய் குரைப்பதை துரதிஷ்டமாக உணர்ந்து பயப்படுபவர்கள் சில பரிகாரங்களை பின்பற்றலாம். 

கால பைரவர் நாயை வாகனமாகக் கொண்டவர் என்பதால் கால பைரவரை வணங்குவது இந்த பிரச்சனையில் இருந்து விடுபட உதவும். கருப்பு நாய்களுக்கு உணவளித்தல், தண்ணீர் அளித்தல் ஆகியவை எதிர்மறை ஆற்றலத்திலிருந்து குறைக்க உதவும். ஓம் நமச்சிவாய, ஓம் கால பைரவாய நமஹ போன்ற மந்திரங்களை உச்சரிப்பது பயத்தை போக்க உதவும்.

இறுதியாக..

இரவில் வீட்டின் முன்பு நாய் குரைப்பது என்பது சகுன சாஸ்திரத்தின் படி பெரும்பாலும் துரதிஷ்டம் அல்லது வரவிருக்கும் ஆபத்தின் எச்சரிக்கையாக கருதப்பட்டாலும், இன்றைய நவீன காலத்தில் நாயின் இயல்பான நடத்தை மற்றும் பாதுகாப்பு உணர்வு தொடர்பானது என்பதை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

சகுனங்களை நம்புவதும், நம்பாததும் தனிப்பட்ட விருப்பம் என்றாலும் பயமின்றி இருப்பதும், நாய்களுக்கு அன்பு காட்டுவது மட்டுமே எதிர்மறை சிந்தனைகளை விலக்கி வாழ்வில் நல்லதை கொண்டு வரும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories