மீன ராசி நேயர்களே, இன்றைய நாள் மனதளவில் ஒருவித அமைதி நிலவும். குழப்பங்கள் நீங்கி, செயல்களில் தெளிவு பிறக்கும். உங்கள் உள்ளுணர்வு செல்வதை கேட்டு செயல்படுங்கள். எதிர்பாராத நபர்களிடமிருந்து உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சமூகத்தில் மதிப்பு கூடும். குறுகிய தூரப் பயணங்கள் ஏற்படலாம்
நிதி நிலைமை:
இன்றைய தினம் பணப்புழக்கம் சீராக இருக்கும். பெரிய அளவில் லாபமோ இழப்போ இருக்காது. அத்தியாவசியம் இல்லாத ஆடம்பரச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அவசரமாக புதிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. நிலுவையில் உள்ள பழைய கனன்களை அடைக்க அல்லது அதற்கான திட்டமிடல் செய்ய உகந்த நாளாகும்.
தனிப்பட்ட வாழ்க்கை:
வீட்டில் அன்பான சூழல் காணப்படும் குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். துணையுடன் உணர்வு பூர்வமான பிணைப்பு அதிகரிக்கும் சிறிய சண்டைகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் அவர்களின் ஆலோசனைகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
பரிகாரங்கள்:
இன்று உங்கள் குலதெய்வத்தை வழிபடுவதற்கு சிறந்த நாளாகும். மாலை நேரத்தில் வீட்டில் நெய் விளக்கேற்றி காயத்ரி மந்திரத்தை 11 முறை உச்சரிக்கவும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.