பொங்கலுக்கு மறுநாள் சிறப்பு கிரக பெயர்ச்சி.! ராஜயோகத்தை அனுபவிக்கப் போகும் அதிர்ஷ்ட ராசிகள்.! உங்க ராசி இருக்கா?

Published : Jan 12, 2026, 11:17 AM IST

Mars Transit in Capricorn 2026: செவ்வாய் பகவான் விரைவில் தனுசு ராசியில் இருந்து வெளியேறி சனி பகவானின் சொந்த வீடான மகர ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். செவ்வாய் பெயர்ச்சியால் பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
செவ்வாய் பெயர்ச்சி 2026

ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். இந்த நிலையில் பொங்கலுக்கு அடுத்த நாள் ஜனவரி 16 2026 அன்று அவர் தனுசு ராசியில் இருந்து வெளியேறி மகர ராசிக்குள் நுழைய இருக்கிறார். ஜனவரி 16 அதிகாலை 4:36 மணிக்கு இந்த பெயர்ச்சி நடைபெறும். இவர் மகர ராசியில் பிப்ரவரி 23 வரை இருப்பார். அதன் பிறகு அவர் கும்பராசிக்கு பெயர்ச்சியாகிறார். செவ்வாய் பெயர்ச்சியால் பலனடையும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
மேஷம்
  • மேஷ ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். எனவே செவ்வாயின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயப்பதாக இருக்கும். 
  • தொழில் வாழ்க்கையில் எதிர்பாராத வெற்றியைப் பெறுவீர்கள். வேலையில் புதிய முன்னேற்றங்களை காண்பீர்கள். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களை அனுபவிப்பீர்கள். 
  • வேலை அல்லது தொழிலில் முன்னேறுவதற்கான புதிய பாதைகள் திறக்கப்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். வாழ்க்கையில் புதிய உச்சங்களை தொடுவீர்கள். 
  • நீண்ட கால பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. புதிய நிலம் அல்லது சொத்துக்கள் சேர்க்கைக்கான அறிகுறிகள் பிரகாசமாக உள்ளது.
35
கடகம்
  • கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் மகர ராசி பெயர்ச்சி சுப பலன்களை தரவுள்ளது. அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். திடீர் அதிர்ஷ்டம் உங்களுக்கு கைகொடுக்கும். 
  • குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வீட்டில் வசதி, வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை நிகழும். சமூகத்தில் அந்தஸ்தும், கௌரவமும் உயரும். 
  • உங்கள் நிதி நிலைமை வலுப்பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். 
  • பணியில் இருப்பவர்கள் ஊதிய உயர்வு அல்லது புதிய பொறுப்புக்களை எதிர்பார்க்கலாம். 
  • தொழில் செய்து வருபவர்களுக்கு அரசு சார்ந்த ஒப்பந்தங்கள் அல்லது லாபம் தரும் டெண்டர்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
45
துலாம்
  • துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த தகராறுகள் முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடிந்து பாகப்பிரிவினை நடக்கும். 
  • நிலம் மற்றும் அசையா சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். புதிய வாகனம் அல்லது கார் வாங்க வேண்டும் என்கிற ஆசை நிறைவேறும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். 
  • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். இழுபறியில் இருந்து வந்த காரியங்கள் நிறைவடைந்து அதன் மூலம் நிதி ஆதாயம் கிடைக்கும். 
  • குடும்பத்தினரிடமிருந்தும் முழு ஆதரவு கிடைக்கும். வீட்டில் அடுத்தடுத்து சுப காரியங்கள் நிகழ்த்துவதற்கான வாய்ப்புகள் உண்டு.
55
மகரம்
  • மகர ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் பெயர்ச்சியாக இருக்கிறார். எனவே இந்த காலகட்டத்தில் உங்கள் தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து வெற்றியைப் பெறுவீர்கள். 
  • வருமானம் அதிகரிக்கும். உபரி வருமானத்திற்கான வழிகள் திறக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலதிபர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். 
  • ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் காணப்படும். இதுவரை சந்தித்து வந்த தடைகள் அனைத்தும் விலகும். 
  • நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். 
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் தேடி வரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories