சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் ராசியின் அதிபதியான சூரிய பகவான் ஆறாம் இடமான ருண, சத்ரு, ரோக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக விரக்தி மனப்பான்மை அதிகரிக்கலாம். ஆனால் குருவின் பார்வை இருப்பதால் இந்த வாரம் மாற்றங்களும், ஏற்றங்களும் கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கையை கைவிடாமல் இருப்பது முக்கியம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு ஏற்ப நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க உள்ளது.
நிதி நிலைமை:
பணப்பழக்கம் திருப்திகரமாக இருக்கும். குருவின் பார்வையால் வருமானத்திற்கு பஞ்சம் இருக்காது. பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் சிறிய தொகை கைக்கு வரலாம். சிலருக்கு அசையா சொத்து, பிள்ளைகளின் திருமணம், கல்வி போன்ற விஷயங்களுக்காக சுப செலவுகள் ஏற்படும். தன லாப அதிபதி புதனால் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். இந்த வாரம் பொன், பொருள், சொத்து சேர்க்கை அதிகரிக்கும்
ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தில் இந்த வாரம் எந்த குறைவும் ஏற்படாது. படுத்த உடன் தூக்கம் வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நாள்பட்ட வியாதிகளில் இருந்து முன்னேற்றம் காண்பீர்கள். வேலைப்பளு காரணமாக சிறு சோர்வு ஏற்படலாம். உணவு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வர வாய்ப்பு உள்ளதால் அதிக நீர் அருந்துவது நல்லது.
கல்வி:
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் சிறப்பான முடிவுகளைப் பெறுவீர்கள். ஞாபகம் மறதி குறைந்து பாடத்தில் கவனம் அதிகரிக்கும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் உங்களுக்கு பக்க பலமாக இருக்கும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். வேலையில் நல்ல மாற்றம் உண்டாகும். தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பார்க்கும் வேலையை மாற்றுவது தொடர்பான முடிவுகளை சில காலத்திற்கு தள்ளிப் போடுங்கள். பணியிடத்திலிருந்து எதிர்மறை எதிர்ப்புகள் விலகும். சிறிய தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளும், காலமும் நெருங்கி உள்ளது.
குடும்ப உறவுகள்:
குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். சகோதர சகோதரிகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். ஏழாம் வீட்டில் சனி பகவான் இருப்பதால் வாழ்க்கைத் துணையுடன் சிறு விவாதங்கள் வரலாம். எனவே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது
சந்திராஷ்டம நாட்கள்:
இந்த வாரம் உங்களுக்கு சந்திராஷ்டம நாட்கள் இல்லை. இருப்பினும் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் ஒரு முறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது.
பரிகாரங்கள்:
சூரிய பகவானுக்கு ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்வது பலன்களைத் தரும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்று வழிபடவும். இது கண்டக சனியின் தாக்கத்தை குறைக்கும். ஏழை, எளியவர்களுக்கு கோதுமையை தானமாக வழங்கலாம். அண்ணாமலையாரை வழிபடுவது பொருளாதார ரீதியான முன்னேற்றம் தரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)