கடக ராசி நேயர்களே, இந்த வாரம் மிகவும் மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தின் அதிபதியான சூரிய பகவான் சம சப்தம ஸ்தானத்திலிருந்து ராசியை பார்க்கிறார். இதனால் உங்கள் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பொருளாதாரம் உயர்வதோடு, குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் ஏற்படும். இதுவரை நிலவி வந்த தடைகள் அனைத்தும் விலகும்.
நிதி நிலைமை:
இந்த வாரம் வரவுக்கும் செலவுக்கும் இடையே சமநிலை இருக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பது சேமிப்பிற்கு வழிவகுக்கும். பங்குச் சந்தை அல்லது முதலீடுகளில் பெரிய தொகையை முதலீடு செய்வதற்கு முன்னர் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. பழைய கடன்களை திருப்பி செலுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். பொருளாதார நிதி நிலைமை உண்டாகும். பணம் சம்பாதிப்பதில் இருந்து வந்த தடைகள் விலகும்.
ஆரோக்கியம்:
அஜீரணக் கோளாறுகள் அல்லது வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வரக்கூடும் என்பதால் உணவு கட்டுப்பாட்டில் கவனம் தேவை. மன அழுத்தம் குறைய யோகா அல்லது தியானம் செய்வது சிறந்தது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் ஓய்வு எடுப்பது நல்லது. வார இறுதியில் ஆரோக்கியம் மேம்படும்.
கல்வி:
மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய வாரமாகும். தேவையற்ற பொழுதுபோக்குகள் உங்கள் கவனத்தை சிதறடிக்கலாம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே சாதகமான முடிவுகளை எதிர்பார்க்க முடியும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
தொழிலில் இந்த வாரம் புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளூவீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்து கொள்வது லாபத்தைப் பெருக்கும். கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்பு இருப்பதால் வெளிப்படை தன்மை தேவை.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். சக ஊழியர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் வார இறுதியில் கிடைக்கும்.
குடும்ப உறவுகள்:
திருமணத்திற்கு வரன் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். பிரிந்த தம்பதிகள் அல்லது பிரிவை நோக்கி சென்று கொண்டிருப்பவர்களுக்கு மனக் கசப்புகள் நீங்கி மீண்டும் சேரும் வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
சந்திராஷ்டம நாட்கள்:
இந்த வாரம் உங்களுக்கு சந்திராஷ்டமம் கிடையாது. சந்திரன் கன்னி முதல் தனுசு வரை மட்டுமே நகர்கிறார். எனவே இந்த வாரத்தில் முக்கிய முடிவுகளை தாராளமாக எடுக்கலாம்.
பரிகாரங்கள்:
இந்த வாரம் கால பைரவரை வழிபடுவது நல்லது. சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடவும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் வெற்றி வழிபட தடைகள் நீங்கும ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் அல்லது தயிர்சாதம் வழங்குவது பலன்களைத் தரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)