மிதுன ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ராசிநாதன் புதன் பகவான் குரு பகவானுடன் சஞ்சாரம் செய்கிறார். வார இறுதியில் அஷ்டம ஸ்தானம் செல்கிறார். இதன் காரணமாக உங்கள் செயலில் ஆற்றலும், வேகமும் அதிகரிக்கும்.
முக்கிய பணிகளை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். உடல் மற்றும் மனதில் புதிய தெம்பு உண்டாகும். மூதாதையர் சொத்துக்கள் மூலம் அனுகூலமாக திருப்பங்கள் உண்டாகும். சிலர் பயன்படாத சொத்துக்களை விற்று லாபம் பார்க்கலாம்.
நிதி நிலைமை:
இந்த வாரம் பணப்புழக்கம் சீராக இருக்கும். அதே சமயம் சில சுப மங்கள விரயச் செலவுகளும் உண்டாகக்கூடும். கடன்களை திருப்பி செலுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.
பங்குச்சந்தை மற்றும் பிற முதலீடுகளில் ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கவும். திடீர் பண வரவுகள் இருந்தாலும் ஆடம்பரச் செலவுகள் ஏற்படக்கூடும். மூதாதையர் சொத்துக்கள் மூலமாக பண வரவு உண்டாகும்.
ஆரோக்கியம்:
உடல் நிலையில் இந்த வாரம் நல்ல முன்னேற்றம் காணப்படும். தந்தை மற்றும் தாய் வழியில் இருந்த உடல்நலக் கோளாறுகள் நீங்கும். இருப்பினும் நரம்பு, வயிறு தொடர்பான சிறு உபாதைகள் தோன்றி மறையலாம். எனவே முறையான உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி அவசியம். மன அழுத்தத்தை குறைக்க தியானம் மேற்கொள்வது நல்லது.
கல்வி:
மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக அமையும். படிப்பில் ஆர்வம் கூடும். கடினமான பாடங்களை கூட எளிதாக புரிந்து கொள்வீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ஞாபக மறதியை தவிர்ப்பதற்கு அதிகாலை எழுந்து படிப்பது நல்லது.
தொழில் மற்றும் வியாபாரம்:
அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். வேலைப்பளு குறைந்து மன நிம்மதி ஏற்படும். மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுக்களைப் பெறுவீர்கள். தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல இடத்திலிருந்து அழைப்புகள் வர வாய்ப்பு உள்ளது.
குடும்ப உறவுகள்:
குடும்ப உறவுகள் இந்த வாரம் திருப்திகரமாக இருக்கும். உறவினர்களிடம் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். குழந்தைப் பேறு உண்டாகும். நண்பர்கள், உடன் பிறந்தவர்களிடம் உறவு ஆழமடையும். தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். குலதெய்வத்தின் அருளால் பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே நல்ல புரிதல் உண்டாகும்.
சந்திராஷ்டம நாட்கள்:
இந்த வாரம் உங்களுக்கு சந்திராஷ்டமம் இல்லை. எனவே பயமின்றி முக்கிய முடிவுகளை எடுக்கலாம். ராசிக்கு எட்டில் சந்திரன் வரும் நாட்களே சந்திராஷ்டமம் எனப்படுகிறது. இந்த வாரம் சந்திரன் கன்னி முதல் தனுசு ராசி வரை சஞ்சரிக்கிறார்.
பரிகாரங்கள்:
புதன்கிழமைகளில் மகாவிஷ்ணுவிற்கு துளசிமாலை சாற்றி வழிபடவும். கருடாழ்வாரை வழிபடுவது தடைகளை நீக்க உதவும். ‘ஓம் நமோ நாராயணாயா’ மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யவும். இயலாதவர்களுக்கு பச்சைபயிறு தானம் செய்வது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)