மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும் வாரமாக இருக்கும் ராசி நாதனான செவ்வாய் பகவான் வார இறுதியில் உச்சம் பெற்று ராசியை நான்காம் பார்வையால் பார்ப்பதால் குடும்பத்தில் நிம்மதி கூடும்.
எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். சாதிக்கும் எண்ணம் மேலோங்கும். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கடினமான சூழ்நிலைகளையும் சாதுரியமாக கையாள்வீர்கள்.
நிதி நிலைமை:
இந்த வாரம் பண வரவு திருப்திகரமாக இருக்கும். அதே சமயம் சுப செலவுகளும் ஏற்படும். பழைய கடன்களை திருப்பி செலுத்துவதற்கான புதிய வழிகள் பிறக்கும்.
நிதி சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் அனுபவமிக்கவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. திடீர் அதிர்ஷ்டம் மூலம் குறிப்பிட்ட தொகை கைக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
ஆரோக்கியம்:
தேக ஆரோக்கியத்தில் தெளிவும், சுகமும் ஏற்படும். ஆரோக்கியம் சீராக இருக்கும். பெரியவர்களுக்கு மூட்டு வலி அல்லது கால் வலி தொடர்பான சிறு உபாதைகள் வந்து நீங்கலாம்.
உடல் உஷ்ணம் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரக்கூடும். சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்வது, போதுமான உறக்கம் அவசியம். மன அழுத்தத்தை தவிர்க்க யோகா அல்லது தியானம் செய்வது சிறந்தது.
கல்வி:
மாணவர்களுக்கு இந்த வாரம் மேன்மை உண்டாகும் வாரமாக அமையும். கல்லூரியில் அரியரஸ் பாடத்தை எழுதி முடிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் ஏற்படும். அதிக கவனம் செலுத்தி படிக்கும் மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
ஆசிரியர்களின் வழிகாட்டுதல் உங்களுக்கு பக்கபலமாக அமையும். உயர்கல்வி பயில வெளிநாடு செல்ல முயற்சிக்கும் மாணவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
இந்த வாரம் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு தலைமைப் பதவி தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு தகுதிக்கும், திறமைக்கும் தகுந்த வேலை கிடைக்கும்.
சிறிதாக தொழில் செய்து வருபவர்கள் விவேகமாக சிந்தித்து தொழிலை பலப்படுத்துவீர்கள். எதையும் தைரியமாக எதிர்கொண்டு லாபத்தை அடைவீர்கள். புதிய கிளைகள் தொடங்க அல்லது விரிவுபடுத்த ஏற்ற காலமாகும்.
குடும்ப உறவுகள்:
குடும்பத்தில் இந்த வாரம் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். குழந்தைகளின் வாழ்க்கையில் புதிய முன்னேற்றங்களைக் காண்பீர்கள்.
குழந்தைகள் மூலம் பெருமை உண்டாகும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பு உண்டாகும்.
சந்திராஷ்டம நாட்கள்:
13-01-2026 அன்று மாலை 5:21 மணி முதல் 16-01-2026 மாலை 5:48 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலையும் யோசித்து செயல்பட வேண்டும். வார்த்தைகளில் நிதானத்துடன் இருக்க வேண்டும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும்.
பரிகாரங்கள்:
முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்கள் சாற்றி வழிபடுவது தடைகளை நீக்க உதவும். சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடவும். ‘ஓம் சரவணபவ:’ மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது நற்பலன்களைத் தரும். இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நன்மை தரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)