Kanavu Sasthiram: இறந்தவர்கள் கனவில் வந்து அழுகிறார்களா? அதிர்ஷ்டமா? ஆபத்தா? ஜோதிடம் சொல்லும் அதிர்ச்சி காரணம்.!

Published : Jan 11, 2026, 12:33 PM ISTUpdated : Jan 11, 2026, 12:36 PM IST

Kanavu Sathiram in Tamil: இறந்து போனவர்கள் நம் கனவில் வந்தால் என்ன அர்த்தம்? அந்தக் கனவிற்கு பின்னால் உள்ள காரணங்கள் என்ன? என்பது குறித்து கனவு சாஸ்திரம் கூறும் விளக்கங்களை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
Kanavu Sathiram in Tamil:

பொதுவாக தூக்கத்தில் கனவுகள் வருவது என்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் இந்த கனவுகள் மறுநாள் நமக்கு மறந்துவிடும். ஆனால் சில கனவுகள் மனதில் ஆழமாக பதிந்துவிடும். குறிப்பாக இறந்த முன்னோர்கள் அல்லது உறவினர்கள் நம் கனவில் அடிக்கடி தோன்றினால் அது ஒரு கலக்கத்தையோ அல்லது அச்சத்தையோ ஏற்படுத்தும். கனவு சாஸ்திரத்தின் படி இறந்தவர்கள் கனவில் தோன்றுவதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்களும், சமிக்கைகளும் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

மகிழ்ச்சியாக இருந்தால்

நோயால் இறந்த முன்னோர்கள் கனவில் மிகவும் மகிழ்ச்சியாகவும், புன்னகையுடனும் அல்லது உங்களை ஆசீர்வதிப்பது போலவும் தோன்றினால் அது நல்ல சகுனமாக கருதப்படுகிறது. விரைவில் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கப் போகிறது என்பதையும், நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்பதையும் இந்த கனவு உணர்த்துகிறது.

கோபமாக இருந்தால்

இறந்த முன்னோர்கள் நம் கனவில் கோபமாக இருப்பது போல தோன்றினால் உங்களிடமிருந்து ஏதோ ஒன்றை விரும்புகிறார்கள் என்று அர்த்தம் அல்லது நீங்கள் ஏதோ தவறு செய்கிறீர்கள் என்பது பொருள். முன்னோர்கள் கோபமாக கனவில் தோன்றினால் குடும்ப பாரம்பரியம் அல்லது தர்ம காரியங்களுக்கு எதிராக நீங்கள் செல்வதை உணர்த்துகிறது. இதன் காரணமாக மூதாதையர்கள் கனவின் வடிவத்தில் வந்து உங்கள் மீது கோபத்தை காட்டலாம் அல்லது நீங்கள் செய்யுள் தவறை தடுக்கும் முயற்சியாகவும் இது இருக்கலாம்.

அழுவது போல தோன்றினால்

இறந்தவர்கள் கனவில் வந்து உங்களிடம் அழுவது போலவோ அல்லது ஏதோ கேட்பது போலவும் இருந்தால் அவர்களுக்கு ஏதேனும் நிறைவேறாத ஆசை இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவர்களுக்காக செய்ய வேண்டிய திதி, தர்ப்பணம் அல்லது பிற சடங்குகளை சரியாக செய்யாத போது அவர்கள் கனவில் வந்து நினைவுபடுத்துவதாக அர்த்தம்.

அமைதியாக பேசினால்

வாழ்க்கையில் மிகப்பெரிய முடிவை எடுக்க முடியாமல் நீங்கள் தவிக்கும் பொழுது இறந்த பெரியவர்கள் கனவில் தோன்றினால் அவர்கள் உங்களுக்கு வழி காட்டுகிறார்கள் என்று பொருள். கனவில் அவர்கள் அமைதியாக பேசுவது போல தோன்றினால் உங்கள் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்பது அறிகுறியாகும்.

சிரித்தபடி தோன்றினால்

உடல்நிலை சரியில்லாமல் இறந்து போன ஒருவர் உங்கள் கனவில் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் காணப்பட்டால் அவர்கள் தற்போது மறு உலகில் நிம்மதியாக இருக்கிறார்கள் என்பதை உங்களுக்கு உணர்த்துகிறார்கள். அதேபோல் இறந்தவர் சிரித்தபடி கனவில் தோன்றினால் அவர்களின் நீண்ட கால ஆசை நிறைவேறி விட்டதாக அர்த்தம். இறந்தவர் ஒரு பொருளையோ அல்லது ஒரு நபரையோ நோக்கி விரல் நீட்டினால் அந்த நபரைப் பற்றிய கெட்ட செய்திகளைக் கேட்க போகிறீர்கள் என்பது அர்த்தம்.

செய்ய வேண்டிய பரிகாரங்கள்

இறந்தவர்கள் அடிக்கடி கனவில் வந்து உங்களை பயமுறுத்துவது போலவோ அல்லது வருத்தமாகவோ இருந்தால் அவர்களுக்கு செய்ய வேண்டிய திதி மற்றும் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய வழிபாடுகளை சரியாக செய்யுங்கள். ஏழைகளுக்கு உணவு அல்லது வஸ்திரதானம் செய்வது முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைய உதவும்.

குறிப்பு: கனவுகள் என்பவை வெறும் கற்பனைகள் மட்டுமல்ல. அவை நமது ஆழ்மனதின் வெளிப்பாடாகவும், சில நேரங்களில் ஆன்மீக செய்திகளாகவும் அமைகின்றன. எனவே இத்தகைய கனவுகளை கண்டு அச்சப்படாமல் அவற்றின் பொருளைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories