Budhan Peyarchi Palangal in Tamil: பிப்ரவரியில் புதன் பகவான் கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால் சில ராசிகளுக்கு பொற்காலம் தொடங்க இருக்கிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வேத ஜோதிடத்தில், புதன் பகவான் பேச்சு, படிப்பு, வணிகம், பொருளாதாரம் மற்றும் பகுத்தறிவின் அடையாளமாகக் கருதப்படுகிறார். புதன் பகவான் தனது ராசியை மாற்றும்போதெல்லாம் சில ராசிகள் அதிக பலன்களை அடைகின்றனர். பிப்ரவரி தொடக்கத்தில் புதன் வக்ர பெயர்ச்சி அடைய இருக்கிறார். இதனால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கூடும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இங்க விரிவாகப் பார்க்கலாம்.
26
ரிஷபம்
புதனின் வக்ர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்களைத் தரும். வருமானம் எதிர்பாராத விதமாக அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க சரியான நேரம். ஏற்கனவே தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். முதலீடுகள் மற்றும் பங்குச் சந்தை மூலம் அதிக பலன்களைப் பெறுவீர்கள்.
36
மிதுனம்
புதனின் வக்ர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கை அற்புதமாக மாறும். பதவி உயர்வு, மரியாதை அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் முதலீடுகள் மற்றும் கூட்டாண்மை நன்மை தரும். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியம் மேம்படும். கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். இத்தனை நாட்களாக தடைபட்ட பணிகள் முடிவடையும்.
புதனின் வக்ர பெயர்ச்சி விருச்சிக ராசிக்கு சாதகமான பலன்களைத் தரும். இந்த நேரத்தில் உங்களுக்கு வசதியும், ஆடம்பரமும் கூடும். வாகனம் அல்லது புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். பூர்வீகச் சொத்துக்களையும் பெறுவீர்கள். குடும்ப உறவுகள் வலுப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய வேலை, பதவி உயர்வு கிடைக்கலாம்.
56
மகரம்
புதனின் வக்ர பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் புதன் வக்ர பெயர்ச்சி அடைகிறார். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். உங்கள் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். எடுக்கும் ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவீர்கள். இந்த மாதம் முழுவதும் மிகவும் சாதகமாக இருக்கும்.
66
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர பெயர்ச்சி தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உங்கள் திறமையை அனைவரும் அங்கீகரிப்பார்கள். புகழ் மற்றும் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும். தவறான புரிதல்கள் நீங்கும். நிதி ரீதியாக நல்ல நிலையை அடைய முடியும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)