Astrology: 18 ஆண்டுகளுக்குப் பின் புதன்-செவ்வாய் உருவாக்கிய விபரீத ராஜயோகம்.! செல்வ செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிகள்.!

Published : Nov 19, 2025, 12:12 PM IST

Vipreet Rajyog 2025: புதன் மற்றும் செவ்வாய் பகவான் இருவரும் இணைந்து விபரீத ராஜ யோகத்தை உருவாக்குகின்றனர். இதன் காரணமாக அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
14
விபரீத ராஜயோகம் 2025

வேத ஜோதிடத்தின்படி கிரகங்களின் இளவரசனாக இருக்கும் புதன் பகவான் 15 நாட்களுக்கு ஒரு முறை ராசியை மாற்றுகிறார். அப்போது அவர் பிற கிரகங்களுடன் இணைந்து சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகிறார். புதன் பகவான் தற்போது செவ்வாய் கிரகத்துடன் விருச்சிக ராசியில் இருக்கிறார். இரண்டு கிரகங்களும் விருச்சிக ராசியில் அஸ்தமன நிலையில் இருக்கின்றனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து விபரீத ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். இதன் காரணமாக பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
மேஷம்

மேஷ ராசியின் எட்டாவது வீட்டில் செவ்வாய் மற்றும் புதன் இணைந்து விபரீத ராஜ யோகத்தை உருவாக்குகின்றனர். எனவே மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் நன்மை பயக்கும். மேஷ ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். குடும்பம் மற்றும் உறவுகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த மோதல்கள் முடிவுக்கு வரும். பிரிந்திருந்த தம்பதிகள் மீண்டும் ஒன்றாக இணைவீர்கள். பழைய மனக்கசப்புகளை மறந்து புதிய உறவுக்கான வாய்ப்புகள் உருவாகும்.

34
கன்னி

கன்னி ராசியின் மூன்றாவது வீட்டில் விபரீத ராஜயோகம் உருவாக இருக்கிறது. இதன் காரணமாக உடன் பிறந்தவர்களுடன் இருந்த மோதல்கள் முடிவுக்கு வரும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். பாக பிரிவினைகள் சமூகமாக நடக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் செய்து வந்த கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் உங்கள் போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியை கொடுப்பீர்கள். உங்கள் எதிரிகளை வென்று வெற்றியை நிலை நாட்டுவீர்கள். நிதி நிலைமை வலுவாக இருக்கும். அரசு மற்றும் நிர்வாகம் தொடர்பான விஷயங்கள் மூலம் பலன்களைப் பெறுவீர்கள்.

44
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த ராஜயோகம் தனுசு ராசியின் 12-வது வீட்டில் உருவாகிறது. இது விரய ஸ்தானம் என்றாலும் சுபமான செலவுகளை அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் அடுத்தடுத்து நடைபெறும். திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு திருமண வரன்கள் தேடி வரும். வேலை இடத்தில் மரியாதை, கௌரவம் அதிகரிக்கும். தொழில் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வாழ்க்கை மகிழ்ச்சியால் நிறைத்திருக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். வாழ்க்கையில் அனைத்து பகுதிகளிலும் நேர்மறையான மாற்றங்களைப் பெறுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories