November 19 Daily Horoscope for 12 zodiac signs: நவம்பர் 19, 2025 12 ராசிகளுக்குமான பொது பலன்கள் குறித்தும், அதிர்ஷ்டம் பெறும் ராசிகள், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் பற்றியும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் முயற்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுறுசுறுப்பும் நிலவும். நீண்ட நாட்களாக தடைபட்டு நின்ற காரியங்கள் முடிவுக்கு வரும். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அதிர்ஷ்ட எண்: 9.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமையில் முன்னேற்றம் காணப்படும். புதிய திட்டங்கள் தொடங்குதல் அல்லது முதலீடுகள் குறித்து சிந்திப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி பிணைப்பு அதிகரிக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருங்க வேண்டிய நாளாகும்.
அதிர்ஷ்ட எண்: 6.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பயணங்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் சந்திப்பு உங்கள் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நிலுவையில் இருந்த பணம் கைக்கு வருவதற்கான வாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்ட எண்: 5.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
கடகம்:
காரியங்களில் இருந்த தடைகள் விலகி நன்மை உண்டாகும். தொடர்புகள் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.
அதிர்ஷ்ட எண்: 2.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமாக இருக்கும். கணவன் மனைவிக்குள் பிணைப்பு அதிகரிக்கும். சண்டையால் பிரிந்திருந்த உறவுகள் மீண்டும் சேரும். பழைய வாகனத்தை விடுத்து புதிய வாகனத்தை வாங்குவீர்கள். அலுவலகத்தில் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 1.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் பழைய பிரச்சினைகளுக்கு இன்று சுமூகத் தீர்வுகளைக் காண்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடல் நலனில் இருந்த சோர்வுகள் நீங்கி, சுறுசுறுப்பு அடைவீர்கள். வியாபாரம் சிறக்கும். தொழிலில் லாபம் பார்ப்பீர்கள். தொழிலில் கூட்டாளிகளாக இருப்பவர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட எண்: 5.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் பண வரவு திருப்திகரமாக இருக்கும். புதிய வழிகளில் பணம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை கேட்பீர்கள். வாகனத்திற்கு பராமரிப்பு செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் போட்டிகள் இருப்பினும் லாபத்தை பார்ப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 6.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்.
விருச்சிகம்:
இன்று எதிர்பாராத பண வரவுக்கான வாய்ப்புகள் உண்டு. கடன் வாங்கியவர்கள் திருப்பி செலுத்துவார்கள். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். கடன் பாக்கிகள் வசூல் ஆகும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படுவது நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண்: 9.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு அதிகாரம் மிக்க பதவிகள் தேடி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. மனைவி வழி உறவினர்களுடன் இருந்த பகைமை நீங்கும். ஊரில் நடைபெறும் விசேஷங்களை முன் நின்று நடத்துவீர்கள். வாகனத்தை மாற்றுவது குறித்து சிந்திப்பீர்கள். வியாபாரம் மற்றும் உத்தியோகத்தில் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்
அதிர்ஷ்ட எண்: 8.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்.
மகரம்:
இன்று திட்டமிட்ட பணியை முழுமூச்சாக முடித்துக் காட்டுவீர்கள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். வியாபாரத்தில் எதிரிகள் விலகுவார்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடினாலும் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட எண்: 3.
அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் சோம்பல் நீங்கி புதிய உற்சாகத்துடனும், சுறுசுறுப்புடனும் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்திருந்த ஆர்டர்கள், ஒப்பந்தங்கள் கைக்கு வரும். புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்கள். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
அதிர்ஷ்ட எண்: 4.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சந்தோஷம் நிலவும். அலுவலகத்தில் இழுத்தடித்து வந்த வேலைகளை இன்றி வெற்றிகரமாக முடிப்பீர்கள். வெளிநாடு செல்ல இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம். பேச்சில் நிதானம் தேவை.
அதிர்ஷ்ட எண்: 7.
அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)