Birth Month : காதலிச்சா இந்த மாசத்துல பிறந்த பெண்களை காதலிக்கனும்!! காதலுக்காக உயிரையே கொடுப்பாங்க

Published : Nov 18, 2025, 06:08 PM IST

ஜோதிடத்தின் படி, சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்த பெண்களை காதலிப்பது மற்றும் திருமணம் செய்வது வரம் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் அவர்கள் காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள் மற்றும் துணைக்கு துரோகம் செய்ய மாட்டார்கள்.

PREV
14
Loyal Girls in Relationships

மனிதராய் பிறந்த நம் அனைவரிடமும் நேர்மை மற்றும் அன்பு கண்டிப்பாக இருக்க வேண்டிய குணமாகும். ஆனால் இன்றைய கலியுலகத்தில் இவை இரண்டிற்கும் பலருக்கு அர்த்தம் தெரியாமலேயே போய்விட்டது. ஆனால் ஜோதிடத்தின் படி சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்த பெண்கள் நேர்மையானவர்கள் மற்றும் அன்பானவர்கள். அவர்கள் தங்கள் துணைக்கு ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டார்கள். அது எந்தெந்த மாதம் என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

24
பிப்ரவரி :

ஜோதிடத்தின்படி, பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் சுதந்திரமான மனம் கொண்டவர்கள். புதுப்புது அனுபவங்களை எப்போதுமே இவர்கள் விரும்புவார்கள். இவர்களிடம் காதல் அதிகமாகவே இருக்கும். இதனால் இவருக்கும் இவரது துணிக்கும் உறவில் எந்தவித பிரச்சனையும் வராது. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தன்னுடைய துணைக்கு ஆதரவாகவே இருப்பார்கள். முக்கியமாக துணைக்கு துரோகம் செய்ய கனவில் கூட நினைக்க மாட்டார்கள்.

34
மே ;

ஜோதிடத்தின் படி மே மாதம் பிறந்தவர்கள் அதிக ஆளுமை திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். பிறரை கவரும் அளவுக்கு இவர்களிடம் அதிக நல்ல குணங்கள் இருக்குமாம். உறவில் ரொம்பவே நேர்மையாக இருப்பார்கள். மேலும் இவர்கள் காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள்.

44
ஜூலை :

ஜோதிடத்தின்படி ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் அதிக உணர்ச்சிவசப்படும் குணம் கொண்டவர்கள். இவர்கள் பிறரை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்வார்கள். இவர்கள் உறவில் இருந்தாலும் அந்த உறவில் பிரச்சினைகள் வந்தாலும் ஒருபோதும் துணைக்கு துரோகம் செய்ய நினைக்க மாட்டார்கள். நேர்மையாக இருப்பார்கள். எனவே இந்த மாதத்தில் பிறந்தவர்களை காதலிப்பவர்கள் பாக்கியசாலிகள்.

Read more Photos on
click me!

Recommended Stories