6 ராசிகளுக்கு மகா பாக்ய யோகம்.! இந்த ராசிகள் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும்.!

Published : Mar 01, 2026, 11:47 AM IST

சுக்கிரன், சனி, புதன் மற்றும் குருவின் சஞ்சாரத்தால் அபூர்வமான 'மகா பாக்ய யோகம்' உருவாகியுள்ளது. இந்த யோகம் ஆறு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

PREV
16
ரிஷபம்

ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன் உச்சம் பெறுவதாலும், குரு தன ஸ்தானத்தில் இருப்பதாலும், 10-ல் புதாதித்ய யோகம் உருவாவதாலும் ராஜயோகம் கிடைக்கும். எந்த துறையாக இருந்தாலும் உயர் பதவி கிடைக்கும். வருமானம் பல வழிகளில் அதிகரிக்கும். லாபம் பெருகும்.

26
மிதுனம்

மிதுன ராசிக்கு 10-ல் சுக்கிரன் உச்சம் பெறுவதாலும், பாக்ய ஸ்தானத்தில் புதாதித்ய யோகம் உருவாவதாலும், வருமானம் பல வழிகளில் பெருகும். பங்குச்சந்தைகள் மூலம் லாபம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும். ஆசைகள் நிறைவேறும். தந்தை வழி பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும்.

36
துலாம்

துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் உச்சம் பெறுவதாலும், குரு அதிர்ஷ்ட ஸ்தானத்திலும், 5 ஆம் வீட்டில் புதாதித்ய யோகம் இருப்பதால் இந்த மாதம் பொற்காலமாக அமையும். பணியிடத்தில் சம்பளம் உயரும். திடீர் பண வரவுக்கான வாய்ப்புகள் உண்டு. தொழிலில் லாபம் கிடைக்கும்.

46
தனுசு

தனுசு ராசியின் அதிபதியான குரு 7 ஆம் வீட்டிலும், 4 ஆம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெற்றும், 3 ஆம் வீட்டில் புதன் இருப்பதால் அதிர்ஷ்டம் கூடும். குறைந்த முயற்சியில் வெற்றி நிச்சயம். வருமான வழிகள் விரிவடையும். பயணங்களால் நன்மை உண்டாகும்.

56
மகரம்

மகர ராசிக்கு அதிபதி சனி, உச்ச சுக்கிரனுடன் இணைந்து தன ஸ்தானத்தில் புதாதித்ய யோகம் உருவாவதால், தொட்டதெல்லாம் பொன்னாகும். தன யோகம் உண்டாகும். எடுத்த காரியங்களை அனைத்திலும் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது.

66
கும்பம்

கும்ப ராசிக்கு தன ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் பெறுகிறார். ராசியின் அதிபதி சனியுடன் இணைகிறார். 5 ஆம் வீட்டில் குரு இருப்பதால் மகா பாக்ய யோகம் உண்டாகும். வருமானத்தை பெருக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories