இன்று பதட்டமான மனநிலையுடன் காணப்படுவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைப்பது தாமதமாகலாம். உங்கள் அன்றாடப் பணிகளில் சுணக்கம் ஏற்படலாம். குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பது கடினமாகலாம்.
நிதி நிலைமை:
இன்று தேவையில்லாத செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்திற்காக செலவுகளை செய்வீர்கள். உங்கள் சேமிப்பு கரைவதால் மனக்கவலை அதிகரிக்கலாம். பண வரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளால் சோர்வு அதிகரிக்கலாம். முதலீடுகள் செய்வதில் அவசரம் காட்ட வேண்டாம்.
தனிப்பட்ட வாழ்க்கை:
தவறான புரிதல் காரணமாக வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். இது குடும்ப வாழ்க்கையில் அமைதி மற்றும் மகிழ்ச்சியை பாதிக்கும். கண் எரிச்சல், கால் வலி போன்ற சிறு உபாதைகள் வரக்கூடும். ஆரோக்கியமும் திருப்திகரமாக இருக்காது.
பரிகாரங்கள்:
சனிக்கிழமை என்பதால் சனி பகவானை வழிபடுவது சிறப்பு. எறும்புகளுக்கு சர்க்கரை கலந்த அரிசி மாவு இடலாம். இயலாதவர்களுக்கு வஸ்திரம் அல்லது அன்னதானம் செய்வது சனி பகவானின் தாக்கத்தைக் குறைக்கும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)