Astrology: செப்டம்பர் இறுதியில் செவ்வாய் உருவாக்கிய சக்தி வாய்ந்த ராஜயோகம்.! பணக்கார யோகம் பெறும் 3 ராசிகள்.!

Published : Sep 29, 2025, 05:22 PM IST

Kuldeepak Rajyog: செவ்வாய் பகவான் உருவாக்கிய குலதீபக் ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
14
குலதீபக் ராஜயோகம் 2025

ஜோதிடத்தில் செவ்வாய் பகவானுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. கிரகங்களின் தளபதியாக விளங்கும் செவ்வாய் பகவான் தற்போது துலாம் ராசியில் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று குலதீபக் ராஜயோகத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த ராஜயோகமானது செவ்வாய் ஒரு ராசியின் 10வது வீடு அல்லது அதன் சொந்த ராசியில் உச்சத்தில் இருக்கும் பொழுது உருவாகும் யோகமாகும். 

அந்த வகையில் செவ்வாய் துலாம் ராசியிலும், அதன் உச்ச ராசியான மகர ராசியின் பத்தாவது வீட்டிலும் இருக்கிறார். எனவே குலதீபக் யோகம் உருவாகியுள்ளது. இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரவுள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
மகரம்

மகர ராசிக்காரர்களின் பத்தாவது வீட்டில் செவ்வாய் பகவான் இருப்பது குலதீபக் ராஜயோகத்தை உருவாக்குகிறது. எனவே மகர ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் பல பலன்களை அனுபவிப்பீர்கள். நீண்ட காலமாக தொழிலில் நிலவி வந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். புதிய வேலை பெற இருந்த தடைகள் நீங்கி நல்ல வாய்ப்புகள் உருவாகும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். 

திருமணமாகாமல் தவித்து வருபவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். நிதி நிலைமை கணிசமாக வலுவடையும். எதிர்காலத்திற்கான சேமிப்பில் ஈடுபடுவீர்கள். வேலையில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வைப் பெறுவீர்கள்.

34
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு குலதீபக் ராஜயோகம் மிகவும் நன்மைகளைத் தரும். மேஷ ராசியின் அதிபதியான செவ்வாய் ஏழாவது வீட்டில் அமர்ந்திருக்கிறார். எனவே மேஷ ராசிக்காரர்களுக்கு சொந்தமாக தொழில் செய்யும் வாய்ப்புகள் அல்லது நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். வேலை இடத்திலிருந்த வேலைப்பளு குறைந்து மன அழுத்தம் நீங்கும். 

நீண்ட காலமாக வேலையில்லாமல் தவித்து வருபவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கலாம். தொழில் செய்து வருபவர்கள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். நிதி நிலைமை எதிர்பாராத அளவு உயரும். அதே சமயம் செலவுகளும் கணிசமாக அதிகரிக்கும்.

44
கடகம்

கடக ராசி காரர்களுக்கு குலதீபக் ராஜயோகம் மிகவும் நன்மை பயக்கும். கடக ராசியின் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக வேலையில் நீங்கள் குறிப்பிட தகுந்த மாற்றத்தை அனுபவிப்பீர்கள். உங்களின் வேலையைக் கண்டு மேலதிகாரிகள் மனமகிழ்ச்சி அடையலாம். இதன் காரணமாக உங்களுக்கு பெரிய பொறுப்புகள் வழங்கப்படலாம். உங்களுக்கான தனித்துவமான அடையாளத்தை உருவாக்குவீர்கள். 

உங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு வணிகத்தில் உங்களுக்கான இடத்தை பெற்றுத் தரும். போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியை கொடுத்து அவர்களை ஓட வைப்பீர்கள். எதிர்காலத்திற்கான நல்ல திட்டங்களில் முதலீடு செய்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும். இந்த காலகட்டத்தில் ஆற்றலுடன் உணர்வீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories