Astrology: இந்த 4 ராசி பெண்கள் எப்பவும் கணவர்கிட்ட சண்ட போடுவாங்களாம்.! “எப்ப வர்றீங்க” நிலைமை தான்.!

Published : Sep 29, 2025, 02:52 PM IST

Zodiac signs that get angry the most: ஜோதிடத்தின்படி சில ராசியைச் சேர்ந்த பெண்கள் அடிக்கடி தனது கணவர் அல்லது குடும்பத்தினருடன் மோதல்களில் ஈடுபடுவார்களாம். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
அதிகம் சண்டை போடும் ராசிகள்

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடக்க வேண்டிய மகிழ்ச்சியான தருணமாகும். ஆனால் பலருக்கும் திருமணம் என்பது மகிழ்ச்சியாக அமைவதில்லை. அனைத்து தம்பதிகளுக்குள்ளும் ஏதாவது ஒரு விஷயத்திற்காக சண்டை எழுந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அனைத்து தம்பதிகளும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பதில்லை. 

குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் இயற்கையாகவே அதிக கோபம் கொண்டவர்களாகவும், பிடிவாதக்காரர்களாகவும் இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் உறவுகளில் எப்போதும் மோதல்கள் இருந்து கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட நான்கு ராசியைச் சேர்ந்த பெண்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய் பகவானால் ஆளப்படுபவர்கள். ஆக்ரோஷம், உற்சாகம், கோபம் அதீத ஆற்றல் ஆகியவையே செவ்வாயின் குணங்களாகும். எனவே மேஷ ராசியைச் சேர்ந்த பெண்களும் அதுபோல அதிக ஆற்றல் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் உற்சாகமான மற்றும் ஆக்ரோஷமான இயல்பு காரணமாக உறவுகளில் அடிக்கடி மோதல்களை சந்திக்கின்றனர். 

தாங்களே வெற்றி பெற வேண்டும் என்கிற இவர்களது விருப்பம் உறவுகளில் உரசல்களை ஏற்படுத்துகிறது. இவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு தயங்குவதில்லை. சிறிய விஷயங்களை கூட ஒரு வாக்குவாதமாக மாற்றி விடுவார்கள். எவ்வளவு சண்டையிட்டாலும் அதை விரைவாக மறந்து விட்டு அடுத்த வேலையை பார்க்க சென்று விடுவார்கள்.

35
சிம்மம்

சிம்ம ராசியைச் சேர்ந்த பெண்கள் சூரிய பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் தலைமைப் பண்பு மிக்கவர்கள் மற்றும் கவனம் பெற வேண்டும் என்கிற விருப்பம் கொண்டவர்கள். இதன் காரணமாக இவர்கள் உறவுகளில் மோதல்களை சந்திக்கின்றனர். தங்களைப் பற்றி பெருமை கொள்வதும், சரியான புரிந்துணர்வு இல்லாததன் காரணமாகவும் உறவுகளில் உரசல்களை உருவாக்கிக் கொள்கின்றனர். 

இவர்களின் இயற்கையான தலைமைத்துவ இயல்பு தங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஏற்க வேண்டும் என தூண்டுகிறது. இதன் காரணமாக உறவுகளில் அடிக்கடி மோதல்கள் உருவாகிறது. தங்கள் துணை தங்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்காதபோது பொங்கி எழுந்து விடுகின்றனர்.

45
விருச்சிகம்

விருச்சிக ராசியும் செவ்வாய் பகவானால் ஆளப்படும் ராசியாகும். விருச்சிக ராசியைச் சேர்ந்த பெண்கள் உணர்ச்சி ஆழமிக்கவர்கள். தீவிரமான குணம் கொண்டவர்கள். இதன் காரணமாக அடிக்கடி உறவுகளில் மோதல்களை எதிர்கொள்கின்றனர். தங்கள் கருத்துக்களில் உறுதியாகவும், மற்றவர்கள் தங்களின் சொல் கேட்டு நடக்க வேண்டும் என்கிற உணர்வு கொண்டவர்கள். இது உறவுகளில் புரிந்துணர்வு குறைவதற்கு வழிவகுக்கிறது. 

குறிப்பாக தங்கள் நம்பிக்கையை யாராவது மீறுவதாக உணர்ந்தால், உடனடியாக மோதல்களில் ஈடுபடுகின்றனர். அனைத்து விஷயத்திலும் நேர்மையாகவும், விசுவாசமாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். அதில் ஏதேனும் குறைபாடு எழுந்தால் அவர்கள் சண்டையை துவங்கி விடுகின்றனர்.

55
மகரம்

மகர ராசிக்காரர்கள் சனிபகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள் மற்றும் தீவிர உணர்வு கொண்டவர்கள். வெளியில் அமைதியாக தோன்றினாலும் உறவுகளில் தீவிர விசுவாசத்தையும், ஒழுக்கத்தையும் எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் பிடிவாத தன்மை காரணமாக சண்டையின் போதும் உறுதியாக இருக்கிறார்கள். சண்டையை தொடங்கி விட்டால் அதிலிருந்து பின் வாங்குவதில்லை. 

இவர்களின் இந்த குணம் நீண்ட கால கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுக்கும். தங்கள் துணையிடம் பொறுப்பின்மையை உணர்ந்தால், உடனடியாக பொங்கி எழுந்து விடுவார்கள். தங்களையும் தங்கள் வாழ்க்கைத் துணையின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்காகவே அவர்கள் அதிகப்படியாக கோபம் கொள்கின்றனர்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories