எல்லாமே தங்கமா கிடைக்கும்; 2 மாசத்துக்கு பொற்காலம் தான் – நீங்க தான் எஜமான் – யாரெல்லாம் தெரியுமா?

First Published | Nov 4, 2024, 8:59 PM IST

Kuja Stambhana 2024 Rajayoga Palan in Tamil: செவ்வாய் பகவான் சஞ்சாரத்தை நிறுத்திவிட்டதால் குஜ ஸ்தம்பனம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும். அதைப் பற்றி பார்க்கலாம்.

Kuja Dosham, Sevvai Dosham, Kuja Stambhana 2024 Yogam

Kuja Stambhana 2024 Rajayoga Palan in Tamil: செவ்வாய் பகவானுக்கு பல பெயர்கள் உண்டு. அதில் சிறப்பு பெயர் மங்கள். இதற்கு மங்களகரமானது அல்லது நல்லது செய்தல் என்று பொருள். இதே போன்று குஜா என்ற பெயரும் உண்டு. இதற்உ மோசமான பிறப்பு என்று பொருள். அதாவது அசுப பலனைக் குறிக்கும். செவ்வாய் பகவான் தைரியம், வலிமை மற்றும் ஆற்றல் என்ற நேர்மறை பக்கத்தையும், எதிர்மறையான செவ்வாய் சண்டை, சச்சரவு, அழிவு போன்ற எதிர்மறை பக்கத்தையும் பிரதிபலிக்கிறது.

Kuja Stambhana 2024 Rajayoga Palan in Tamil,

ஸ்தம்பனம் என்றால் குத்துவது என்று பொருள்படும். செவ்வாய் மற்றும் ராகுவின் யோகம் குஜ ஸ்தம்பனம் என்று அழைக்கப்படுகிறது, அதாவது செவ்வாய் அழிவு. இப்போது கடக ராசியில் பாதகமான நிலையில் சஞ்சரித்து வந்த செவ்வாய் பகவான் சஞ்சாரத்தை நிறுத்திவிட்டார். இதற்கு குஜ ஸ்தம்பனம் என்று பெயர். இது சில ராசிகளுக்கு நல்ல பலன்களையும், சில ராசிகளுக்கு எதிர்மறையான பலன்களையும் கொடுக்கும். அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.

Tap to resize

Kuja Stambhana 2024 Yogam, Astrology, Horoscope,

செவ்வாய் சஞ்சாரத்தை நிறுத்தியதால் ரிஷபம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கு அதிகாரம், விருத்தி மற்றும் தன யோகம் உண்டாக வாய்ப்புள்ளது. இந்த யோகம் வரும் ஜனவரி 21ஆம் தேதி வரை நீடிக்கும். இதே போன்று இந்த ராசிகளைத் தவிர மற்ற ராசியினருக்கு செவ்வாய் பகவானின் தேகத்தால் வேலைப்பளு, மன உளைச்சல், நோய், சண்டை, சச்சரவு ஏற்படும். அதோடு குஜ ஸ்தம்ப தோஷம் ஏற்படும். ஒவ்வொரு நாளும் சுப்ரமணியாஷ்டகம் செய்வதால் இந்த தோஷத்தின் பாதிப்பு படிப்படியாக குறையும்.

Kuja Stambhana Raja Yogam

ரிஷப ராசிக்கான குஜ ஸ்தம்பனம் யோக பலன்:

ரிஷப ராசிக்கு செவ்வாய் பகவான் நீச்சமாக இருப்பதால் நீச்ச பங்க ராஜயோகம் உருவாகிறது. இதனால், நீங்கள் ஒருநாளும் கனவில் கூட நினைத்து பார்த்திராத திருமண உறவு ஏற்படும். காதல் வாழ்க்கையில் நெருக்கம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளியூர், வெளிநாடு பயணங்கள் செல்லும் வாய்ப்பு வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

Kuja Stambhana Rajayoga Palan In Tamil, Astrology

கன்னி ராசிக்கான குஜ ஸ்தம்பனம் ராஜயோக பலன்:

கன்னி ராசிக்கு செவ்வாய் பகவான் ஆதாய ஸ்தானத்தில் நீச்சமாக இருப்பதால் இன்னும் 2 மாத காலத்திற்கு வருமானம் வந்து கொண்டே இருக்கும். வரும் ஜனவரி 21 ஆம் தேதி வரையில் பல வழிகளிலிருந்து காசு, பணம் குவியும். இந்த 2 மாதமும் உங்களுக்கு பொருளாதார பிரச்சனையே வராது. உதாரணத்திற்கு வங்கிக்கே வட்டிக்கு காசு, பணம் கொடுக்கும் நிலை வரும் என்று கூட சொல்லலாம். பிரபலங்களை சந்தித்து பேசுவீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில், வியாபாரம் நன்றாக இருக்கும். மற்றவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் நன்மையான பலனை அடைவீர்கள்.

Kuja Stambhana 2024 Rajayoga Palan in Tamil

துலாம் ராசிக்கான குஜ ஸ்தம்பனம் ராஜயோக பலன்:

துலாம் லக்னத்திற்கு 10 ஆம் இடத்தில் குஜ ஸ்தம்பனம் இருப்பதால் அதிகார ராஜயோகம் உண்டாகும். இதனால், சம்பளம் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும். வேலை தேடும் இளைஞர்களுக்கு வெளிநாட்டிலிருந்து அழைப்பு வரும். நல்ல நிறுவனங்களில் வேலைக்கு சேருவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் அதிகரிக்கும். அடிக்கடி வெளியூர் பயணம் சென்று வருவீர்கள்.

Kuja Stambhana 2024 RajaYogam Palan in Tamil, Kuja Stambhana 2024 Yogam

விருச்சிகம் ராசிக்கான குஜ ஸ்தம்பனம் ராஜயோக பலன்:

விருச்சிக ராசிக்கு அதிபதியான செவ்வாய் பகவான் சுப ஸ்தானத்தில் உறைவதால் செல்வம் அதிகரிக்கும். அடுத்த 2 மாதங்களுக்கு பொற்காலமான மாதமாக இருக்கும். நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். வெளிநாட்டு யோகம் தேடி வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புனித யாத்திரைகள் செல்வீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவீர்கள்.

Latest Videos

click me!