Ketu Peyarchi: கேதுவின் பிடியில் சிக்கும் 3 ராசிகள்.! எழவே முடியாத அளவு பலத்த அடி விழப்போகுது.!

Published : Jan 25, 2026, 11:32 AM IST

Ketu Peyarchi 2026: நிழல் கிரகமான கேது, 2026 ஜனவரியில் நட்சத்திர பெயர்ச்சி அடையப் போகிறார். இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் இருக்கும். சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
14
கேது நட்சத்திரப் பெயர்ச்சி 2026

ஜோதிடத்தில் கேது நிழல் கிரகமாக அறியப்படுகிறார். இவர் மற்ற கிரகங்களைப் போல அல்லாமல் எப்போதும் பின்னோக்கியே நகர்கிறார். அவர் ஜனவரி 25, 2026 அன்று, பூரம் நட்சத்திரத்தில் நுழைகிறார். இதன் தாக்கம் சிலருக்கு அசுபமாக இருக்கும். கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் பாதிப்படப் போகும் 3 ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

24
மேஷம்

கேது நட்சத்திரப் பெயர்ச்சியால் மேஷ ராசியினர் கவனமாக இருக்க வேண்டும். ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கி அடுத்த சில வாரங்களுக்கு மேஷ ராசியினர் புதிய வேலை, முதலீடுகளைத் தவிர்க்கவும். இல்லையெனில் அவர்கள் பெரிய நஷ்டம் அல்லது நிதி இழப்புகளை சந்திக்க நேரிடலாம். முக்கிய பயணங்களைத் தள்ளிப்போடவும். உடல்நிலம் கடுமையாக மோசமடையக்கூடும். மற்றவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அவர்கள் தவறான முடிவுகளையும் எடுக்கக்கூடும்.

34
சிம்மம்

கேது சிம்ம ராசியில் இருப்பதால், பழைய நோய்கள் மீண்டும் தலைதூக்கலாம். நீதிமன்ற வழக்குகள் சாதகமற்றதாக மாறக்கூடும். குடும்பத்தில் தகராறு ஏற்படலாம். தேவையற்ற மனக்கசப்புகள் அல்லது பிரிவுகள் ஏற்படக்கூடும். பணியிடத்தில் கொடுக்கப்பட்ட வேலைகள் மற்றும் இலக்குகளை முடிக்காததால் அதிகாரிகள் கோபமடைவார்கள். அடிக்கடி வாகனப்பழுது அது தொடர்பான தொடர் செலவுகள் மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.

44
தனுசு

கேது பெயர்ச்சியால் தனுசு ராசியினருக்கு கெட்ட செய்தி வரலாம். இது மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். உணவுப் பழக்கத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வங்கிக் கணக்கில் இருப்பு குறையலாம். கடன் வாங்க நேரிடலாம். முன்பு கடனாக கொடுத்த பணம் கைக்கு கிடைக்காமல் போகலாம். முதலீடுகள் நஷ்டத்தை சந்திக்கலாம். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம் என்பதால் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தந்தை அல்லது தாய் வழி உறவினர்களுடன் உறவு மோசமடையக்கூடும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories