ஆரம்பம் ஆகும் கேது பெயர்ச்சி.! லட்சாதிபதி யோகம் பெறும் 4 ராசிகள்.! கட்டு கட்டாகப் பணத்தை அள்ளப்போறீங்க.!

Published : May 03, 2026, 05:35 PM IST

Ketu Magha Natchathira Peyarchi 2026 : கேது பகவான் மே 29ஆம் தேதி மகம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் பெயர்ச்சியாக இருக்கிறார். இதன் காரணமாக 4 ராசிக்காரர்கள் அதிகபட்ச பலன்களைப் பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
17
Ketu Magha Natchathira Peyarchi 2026

வேத ஜோதிடத்தில் 9 கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது நிலையை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் நவகிரகங்களில் முக்கியமான கிரகங்களான ராகு-கேது நிலையில் மாற்றம் ஏற்பட இருக்கிறது. நிழல் கிரகங்களாக அறியப்படும் ராகு மற்றும் கேது பகவான் பிற கிரகங்களை போல் அல்லாமல் பின்னோக்கிய நிலையிலேயே பயணிக்கின்றன. இந்த நிலையில் வருகிற மே 29ஆம் தேதி காலை 10:16 மணிக்கு கேது பகவான் மகம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் பெயர்ச்சியாக இருக்கிறார்.

27
கேது நட்சத்திர மகம் நட்சத்திர பெயர்ச்சி

மகம் நட்சத்திரம் என்பது கேது பகவானின் சொந்த நட்சத்திரமாகும். தனது சொந்த வீட்டில் கேது குடியேறுவதால் சில ராசிகளுக்கு அதிகபட்ச நன்மைகள் கிடைக்க உள்ளது. ஜூன் 30-ம் தேதி வரை அவர் மகம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நிலைத்திருப்பார். கேதுவின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் ரிஷபம், கன்னி, தனுசு, மகரம் ஆகிய நான்கு ராசிகள் அதிகபட்ச பலன்களைப் பெற உள்ளனர். அது குறித்து இங்கு விரிவாகக் காணலாம்.

37
ரிஷபம்

கேதுவின் நட்சத்திரப் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்க உள்ளது. ரிஷப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பொருளாதார மேன்மை பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். தள்ளிப்போன காரியங்கள் வெற்றிகரமாக முடியும். 

எதிர்பாராத பண வரவு கிடைக்கும். பழைய கடன்களை அடைக்க வாய்ப்புகள் உண்டாகும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாகும். வறுமை நீங்கி, செல்வம் பெருகும். நிதி நிலைமையில் உயர்வு கிட்டும். மாணவர்களுக்கு சுபயோகமாக அமையும்.

பரிகாரம் : ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது மன நிம்மதியையும், எதிரிகளை வீழ்த்தும் ஆற்றலையும் கொடுக்கும்.

47
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு கேதுவின் நட்சத்திரப் பெயர்ச்சியால் நன்மைகள் உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். வாழ்க்கையில் புதிய மாற்றமும், நிவாரணமும் கிடைக்கும். நீண்ட நாள் உடல் பாதிப்புகள் குறையும். எதிரிகள் விலகுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை அங்கீகரிக்கப்படும். 

புதிய பொறுப்புகள் தேடி வரும். தொழிலில் பெரிய வெற்றி ஒன்று காத்திருக்கிறது. நினைத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். சகோதரர்கள் வழியில் நன்மைகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் அகலும்ழ திட்டமிட்ட பணிகள் முடிவடையும். வருமானம் கணிசமாக உயரும். திருமணத்தில் இருந்த தடைகள் அகலும்.

பரிகாரம் : ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவது, நோட்டு புத்தகங்கள் வழங்குவது கேதுவின் அருளைப் பெற்றுத் தரும்.

57
தனுசு

கேதுவின் நட்சத்திரப் பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு லாபத்திற்கான புதிய கதவுகள் திறக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். செல்வம் பெருகும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வருமானம் உயரும். முதலீடுகளின் மூலம் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். 

பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகள் கிடைக்கும். உங்கள் காதல் திருமணத்தை நோக்கி நகரும். பல காலமாக தேங்கி கிடந்தப் பணிகள் முடிவுக்கு வரும். பாக்கியங்களையும், அதிர்ஷ்டத்தையும் பெறுவீர்கள். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளுடன் இருந்த பிணக்குகள் தீரும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் அகலும்.

பரிகாரம் : குலதெய்வ வழிபாடு செய்வதும், ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வதும் உங்கள் புகழை உயர்த்தும்.

67
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு கேதுவின் நட்சத்திரப் பெயர்ச்சியால் தடைகளை தகர்த்து முன்னேற்றம் பெரும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் புதிய முதலீடுகளை செய்வீர்கள். கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். 

உங்களை முன்னேற விடாமல் முடக்கி போட்டிருந்த அல்லது தடை கற்களாக இருந்த விஷயங்கள் தாமாக விலகும். திடீர் யோகங்கள் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்வீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நிகழும். புதிய வாகனம், சொத்து, வீடு, வாங்கும் யோகங்கள் உருவாகும். தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாத்தியக் கூறுகள் கிடைக்கும்.

பரிகாரம் : வெள்ளிக்கிழமைகளில் நாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்வதும், சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதும் மிகுந்த நன்மைகளைத் தரும்.

77
பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

Read more Photos on
click me!

Recommended Stories