People Born in These Nakshatra Face More Hardships in Life : ஜோதிடத்தின் படி சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சிறு வயது முதலே கஷ்டங்கள் அதிகமாக இருக்கும். அந்த நட்சத்திரங்கள் எவை என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
People Born in These Nakshatra Face More Hardships in Life
ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசிக்கும், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனித்துவமான பண்புகளும் குணாதிசயங்களும் உண்டு. சிலர் எந்த கடின உழைப்பும் இல்லாமல் வசதியான வாழ்க்கையை வாழ்வதை காண்கிறோம். ஆனால் சிலருக்கு சோதனை மேல் சோதனை வந்து கொண்டே இருக்கும். குறிப்பாக நான்கு நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கஷ்டத்தை மட்டுமே அதிக அளவில் அனுபவிப்பார்களாம். அந்த நட்சத்திரங்கள் என்ன? அதற்கான காரணங்கள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
26
சதயம்
சதய நட்சத்திரம் ராகு பகவான் ஆளும் நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகுவின் தாக்கத்தால் வாழ்வில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். இவர்கள் தனிமையை அதிகமாக உணர்வார்கள். அடிக்கடி மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். இருப்பினும் இவர்கள் அதி புத்திசாலிகளாக விளங்குவார்கள். எவ்வளவு சிரமங்கள் ஏற்பட்டாலும் தனது புத்திசாலித்தனம் கொண்டு அனைத்தையும் முறியடித்து வெற்றியைப் பெறுவார்கள்.
36
ஆயில்யம்
ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு துன்பம் நிறைந்த வாழ்க்கை இருக்கும். ஆயில்ய நட்சத்திரத்தின் அதிபதியாக புதன் பகவான் விளங்குகிறார். இவர்கள் குடும்ப வாழ்க்கையில் அடிக்கடி துன்பங்களை அனுபவிப்பார்கள். நம்பிக்கை துரோகத்திற்கு ஆளாவார்கள். பிறருடன் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பிறர் துன்பங்களை தன் துன்பமாக பாவிப்பார்கள். பல சமயங்களில் இதுவே இவர்களுக்கு எதிராக திரும்பிவிடும். தேவையில்லாத சிக்கல்களில் அடிக்கடி மாட்டிக் கொள்வது ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வழக்கம்.
பரணி நட்சத்திரத்தின் அதிபதியாக சுக்கிர பகவான் விளங்கி வருகிறார். சுக்கிர பகவான் செல்வம், செழிப்பு, ஆடம்பரம் ஆகியவற்றின் காரகராவர். இருப்பினும் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் கடுமையான சோதனைகளை சந்திப்பார்கள். இவர்களின் கடின உழைப்புக்கு மட்டுமே பலன்கள் கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிக பொறுப்புணர்வும், கடமை உணர்ச்சியும் உள்ளவர்கள். இவர்களுக்கு எதுவும் எளிதில் கிடைத்து விடாது. சிறிய விஷயங்களைக் கூட பெரிய முயற்சி செய்து பெற வேண்டியதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு இவர்களுக்கு மிக குறைவு.
56
கேட்டை
கேட்டை நட்சத்திரத்தை புதன் பகவான் ஆட்சி செய்கிறார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறு வயது முதல் பெரிய பொறுப்புகள் வந்து சேரும். இவர்கள் குடும்ப பாரத்தை சிறுவயதிலிருந்தே சுமக்கத் தொடங்கி விடுவார்கள். தனக்கென வாழாமல் தன்னை சார்ந்து இருப்பவர்களுக்காக வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணிப்பார்கள். இவர்கள் கடுமையாக உழைப்பார்கள். இருப்பினும் தனது வாழ்நாள் முழுவதும் நிதி சிக்கல்களையும், கஷ்டங்களையும் மட்டுமே அனுபவிப்பார்கள்.
66
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.