Karthigai Matha Rasi Palan for simma rasi: இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 17, 2025 அன்று பிறக்க உள்ளது. கார்த்திகை மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
கார்த்திகை மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு முயற்சிகளில் தடைகளும், ஆரோக்கியத்தில் சவால்களும் ஏற்படலாம். சிறு பின்னடைவுகள் இருந்தாலும் ராசியின் அதிபதியின் சூரியனின் நிலைப்பாடு ஓரளவு ஆறுதலைத் தரும்.
கிரக நிலைகள்:
உங்கள் ராசியின் அதிபதியான சூரிய பகவான் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார்.
குரு பகவான் கர்ம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஓரளவு நன்மையை எதிர்பார்க்கலாம்.
சுக்கிர பகவானின் பெயர்ச்சியானது மாதத்தின் பிற்பகுதியில் நல்ல பலன்களை தரக்கூடும்.
பொதுவான பலன்கள்:
சனி மற்றும் கேதுவின் ஆதிக்கம் காரணமாக இந்த மாதம் சற்று மனக்குழப்பமும் இனம் புரியாத கவலையும் ஏற்படலாம்.
எளிதில் முடிக்கக்கூடிய காரியங்கள் கூட மலைப்பாகத் தோன்றலாம் அல்லது அதிக தாமதத்திற்கு பிறகு முடியலாம்.
இந்த காலகட்டத்தில் தன்னம்பிக்கை குறையாமல் இருப்பது அவசியம்.
மாதத்தின் பிற்பகுதி சற்று ஆறுதலை அளிப்பதாக இருக்கும்.
நிதி நிலைமை:
சனியின் ஆதிக்கம் மற்றும் பிற கிரகங்களின் சஞ்சாரங்கள் காரணமாக இந்த மாதம் வருமானத்திற்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
திடீர் மருத்துவ செலவுகள் அல்லது எதிர்பாராத விரயங்கள் நிதி நிலைமையை பாதிக்கலாம்.
கொடுத்த வாக்கை காப்பாற்றுவது சவாலாக காரியமாக இருக்கலாம். எனவே கடன் கொடுப்பது வாங்குவதை தவிர்க்கவும்.
மாதத்தின் பிற்பகுதியில் புதன் மற்றும் சுக்கிர நிலைப்பாடு காரணமாக பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும்.
கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட வாய்ப்புகள் கிடைக்கும்.
பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
வேலை மற்றும் தொழில்:
வேலைப்பளு இந்த மாதம் கணிசமாக அதிகரிக்கக்கூடும். சக ஊழியர்கள் அல்லது மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
பதவி உயர்வு அல்லது வேலை மாற்றம் தொடர்பான முயற்சிகள் தாமதமாகும்.
மாதத்தின் பிற்பகுதியில் வேலையில் எதிர்பாராத மாறுதல் அல்லது நல்ல செய்திகள் கிடைக்கலாம்.
வியாபாரத்தில் கிடைக்க வேண்டிய லாபம் அல்லது வரவேண்டிய தொகை தாமதமாகக் கூடும். பங்குதாரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
மாதத்தின் பிற்பகுதியில் சுக்கிரனின் நிலை காரணமாக வாடகை கட்டிடத்தில் நடந்து வரும் தொழிலை சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சிகள் கைகூடலாம்.
குடும்ப உறவுகள்:
குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
பெற்றோரின் உடல் நலனில் அதிக கவனம் தேவைப்படலாம். மருத்துவ செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மாதத்தின் இறுதியில் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகலாம்.
உடன்பிறந்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கக் கூடும். வாழ்க்கைத் துணையுடன் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
ஆரோக்கியம் மற்றும் கல்வி:
கிரகங்களின் ஆதிக்கம் காரணமாக ஆரோக்கியத்தில் தொல்லைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மருத்துவச் செலவுகள் அதிகரிக்க கூடும்.
வாகனங்களில் செல்லும் பொழுது மிகுந்த கவனம் தேவை. மாதத்தின் பிற்பகுதியில் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
உடல்நலப் பிரச்சினைகள் தீரும். மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ள தியானம் அல்லது உடற்பயிற்சி செய்வது நல்லது.
கல்வி பயிலும் மாணவர்களுக்கு அதிக முயற்சி தேவைப்படலாம். கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பரிகாரங்கள்:
சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும். முடிந்தால் மாலை வேளைகளில் சனீஸ்வர சன்னிதியில் வழிபாடு செய்வது நல்லது.
சூரிய பகவானை காலையில் வணங்குவதும் விஷ்ணு பகவானை வணங்குவதும் மனம் நிம்மதி அடைய உதவும்.
துர்க்கை அம்மனை வழிபடுவது, சிவ வழிபாடு சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நேர்மறை பலன்களை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)