Karthigai Matha Rasi Palan for kadaga rasi: இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 17, 2025 அன்று பிறக்க உள்ளது. கார்த்திகை மாதம் கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
கார்த்திகை மாதம் கடக ராசிக்காரர்களுக்கு சவால்களையும், அதை முறியடித்து வெற்றியடையும் ஆற்றலை அள்ளித் தரும் அற்புத மாதமாக இருக்கும்.
கிரக நிலைகள்:
மாதத்தின் தொடக்கத்தில் சூரிய பகவானின் பெயர்ச்சி தொழில், கல்வி மற்றும் பிள்ளைகள் தொடர்பான விஷயங்களில் நேர்மறை மாற்றங்களை தரும்.
சூரிய பகவானுடன் செவ்வாய் இணைவது அதிக ஆற்றல்களையும், சவால்களை எதிர்கொள்ளும் பலத்தையும் தரும்.
சனி பகவான் லாப ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைவது பொருளாதார பற்றாக்குறையைப் போக்கும்.
பொதுவான பலன்கள்:
கடந்த சில மாதங்களாக நீங்கள் சந்தித்து வந்த சிரமங்கள் நீங்கி வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உறுதியான முடிவுகளை எடுத்து அதில் வெற்றி பெறும் ஆற்றல் பிறக்கும். தொட்டதெல்லாம் துலங்கும் காலம் உருவாகும். உங்கள் தலைமைத்துவம் பாராட்டப்படும்.
சுப காரியங்களில் இருந்த தடைகள் நீங்கி நல்ல மாற்றங்கள் ஏற்படும். சவால்கள் நிறைந்த மாதம் என்றாலும் அத்தனையும் முறியடித்து உறுதியாக வெற்றி பெறுவீர்கள்.
நிதி நிலைமை:
கார்த்திகை மாதம் பணவரவு மிகவும் திருப்திகரமாக இருக்கும். நிதி நிலைமை வலுப்பெறும்.
லாப ஸ்தானத்தில் சனி வக்ர நிவர்த்தி அடைவதால் பொருளாதார பற்றாக்குறை அகலும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான லாபத்தைக் காண்பீர்கள். புதிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள்.
திடீர் பணவரவு, திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. பரம்பரை சொத்துக்கள் மூலம் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
அசையும் மற்றும் அசையா சொத்துகளான நிலம், வீடு, வாகனம், ஆபரணம் ஆகியவை சேரும் யோகம் உண்டு.
வேலை மற்றும் தொழில்:
வேலை மாற்றம் குறித்த எண்ணம் நீண்ட காலமாக இருந்தால் அதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு, விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கலாம்.
தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சகோதரர்களுடன் இணைந்து தொழில் செய்துபவர்கள் தொழிலை விரிவு படுத்துவீர்கள்.
வேலை சம்பந்தமாக நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். பெரிய ஒப்பந்தங்களை முடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
குடும்ப உறவுகள்:
இந்த மாதம் முழுவதும் குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான தருணங்கள் ஏற்படும்.
பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகளை பெறுவீர்கள்.
பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காணப்படும். சில குழந்தைகளுக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும்.
பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
வாக்கு ஸ்தானம் பலம் அடைவதால் உங்களின் பேச்சுக்கு மதிப்பு மரியாதை கூடும்.
ஆரோக்கியம் மற்றும் கல்வி:
சூரியனின் பார்வை காரணமாக உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும்.
ஆரோக்கியத்தில் போதுமான அளவிற்கு அக்கறை கொள்வது நல்லது. தேவையற்ற அலைச்சல்களை குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
பிள்ளைகளின் படிப்பு சிறந்து விளங்கும் நினைத்த வெற்றிகளைப் பெறுவீர்கள்.
பரிகாரங்கள்:
சிவன் வழிபாடு செய்வது உங்களுக்கு யோகத்தைத் தரும். திங்கட்கிழமைகளில் விரதம் இருப்பது நன்மை பயக்கும்.
ஏதேனும் தடைகள், தாமதங்கள் ஏற்பட்டால் வைத்தீஸ்வரன் கோவில் முருகனை செவ்வாய்க்கிழமைகளில் வழிபடுவது நல்லது.
காரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்க விநாயகப் பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
இயலாதவர்கள் ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)