Mithuna Rasi Karthigai Month Rasi Palan: இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 17, 2025 அன்று பிறக்க உள்ளது. கார்த்திகை மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
கார்த்திகை மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு பல நல்ல மாற்றங்கள் ஏற்படும் காலமாக அமைய வாய்ப்பு உள்ளது. உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி காணப்படும்.
கிரக நிலைகள்:
சூரிய பகவானின் சஞ்சாரம் காரணமாக வேலை மற்றும் தொழிலில் வெற்றி கிடைக்கும்.
குரு பகவான் வக்ர நிலையில் பயணிப்பது அனுகூலத்தைத் தரலாம்.
சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவது வேலை மற்றும் தொழிலில் இருந்து வந்த நெருக்கடிகளை குறைக்கும்.
செவ்வாய் மற்றும் புதன் ஆகிய கிரகங்களின் சாதகமான நிலை காரணமாக சுப பலன்கள் கிடைக்கலாம்.
பொதுவான பலன்கள்:
சூரிய பகவானின் சஞ்சாரம் காரணமாக இந்த மாதம் உங்களுக்கு ஆற்றல் மற்றும் உற்சாகம் அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி குவியும்.
சனி பகவானின் வக்ர நிவர்த்தி காரணமாக தொழில் மற்றும் வேலைகளில் இருந்து வந்த தடைகள் விலகி நிலைத்தன்மை ஏற்படும். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும்.
புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதிலும், ஆய்வு செய்வதிலும் ஆர்வம் அதிகரிக்கும்.
நெருங்கியவர்கள் மூலம் பாதிப்புகள் வரலாம் என்பதால் மற்றவர்களை கண்மூடித்தனமாக நம்புவதை தவிர்க்க வேண்டும்.
நிதி நிலைமை:
பொருளாதார நிலை படிப்படியாக மேம்படும். மாதத்தின் தொடக்கத்தில் இருந்து வந்த பலவீனங்கள் நீங்கி பணப்புழக்கம் சீராகும்.
வியாபாரம் செய்து வருபவர்கள் தொழிலில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். பாதியில் நின்று போன திட்டங்கள் அல்லது வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
கடன் தொடர்பான விஷயங்களை சமாளிக்கும் அளவிற்கு வலிமை கிடைக்கும். நிலம் அல்லது அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
வேலை மற்றும் தொழில்:
பணியிடத்தில் உங்கள் தலைமைத்துவத்திறன்கள் பாராட்டப்படும். பணியிடத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்படுவீர்கள்.
வேலையை மாற்றும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வதற்கான புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
உழைக்கும் மக்களுக்கு இந்த மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
குடும்ப உறவுகள்:
குடும்ப வாழ்க்கை பொதுவாக நன்றாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
குழந்தைகளுக்கு வரம் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கலாம்.
திருமணமான புது தம்பதிகளுக்கு உறவு இனிமையாக இருக்கும். இருப்பினும் சிறு கருத்து வேறுபாடுகள் எனக்கூடும் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படலாம்.
ஆரோக்கியம் மற்றும் கல்வி:
இந்த மாதம் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும். சிறு உடல்நலப் பிரச்சனைகள் உங்களை வாட்டி வதைக்கலாம்.
காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்சனைகள் எழக்கூடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு இந்த மாதம் கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும் மாதமாக இருக்கும்.
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் நல்ல வெற்றியை பெறலாம்.
பரிகாரங்கள்:
இந்த மாதம் முழுவதும் விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்வது மிகுந்த நன்மைகளைத் தரும்.
சிவாலயங்களில் நடைபெறும் சங்காபிஷேகங்களில் கலந்து கொள்வது புண்ணியத்தையும், செல்வத்தையும் அதிகரிக்கும்.
திருவண்ணாமலை தீபம் அன்று வீட்டில் ஒற்றைப்படையில் தீபம் ஏற்றி வழிபடுவது நேர்மறை பலன்களை அதிகரிக்கும்.
கோவிலின் வெளியில் அமர்ந்திருக்கும் யாசகர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)