Mesha Rasi Karthigai Month Rasi Palan: இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 17, 2025 அன்று பிறக்க உள்ளது. கார்த்திகை மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
கார்த்திகை மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான மாதமாக அமைய வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.
கிரக நிலைகள்:
சூரியன் மாதத்தின் தொடக்கத்தில் எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதன் மூலம் பரம்பரை சொத்து ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
சனி பகவான் லாப ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைவது மிகவும் சாதகமான நிலையாகும். பொருளாதார நிறைவைத் தரும்.
ராசிக்கு அதிபதியான செவ்வாய் நல்ல நிலையில் இருப்பதால் நற்பலன்கள் அதிகரிக்கும்.
பொதுவான பலன்கள்:
நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும் வெற்றிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
உங்கள் செயல் திறன் மற்றும் தலைமைத்துவ பண்புகள் பாராட்டப்படும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும்.
நீங்கள் மனதில் நினைத்து நிறைவேறாமல் இருந்த காரியங்கள் இந்த கார்த்திகை மாதத்தில் ஒவ்வொன்றாக நிறைவேறத் துவங்கும்.
சுப காரியங்களில் ஏற்பட்டு வந்த தடைகள் விலகி, குடும்பத்தில் அடுத்தடுத்த சுப காரியங்கள் நடக்கும்.
நிதி நிலைமை:
நிதி நிலைமையைப் பொறுத்தவரை கார்த்திகை மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். பொருளாதார நிலைமை சீரடையும்.
பரம்பரை சொத்துக்கள் மூலம் நிதி ஆகாயம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் வலுவாக உள்ளன.
வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் கிடைக்கும்.
இதுவரை உங்களை வாட்டி வதைத்து வந்த கடன் சுமைகள் குறைவதற்கான காலம் நெருங்கியுள்ளது.
வேலை மற்றும் தொழில்:
நீண்ட நாட்களாக வேலை மாறுதலாக்காக காத்திருப்பவர்களுக்கு இந்த மாதத்தில் அதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
உங்களின் தலைமைத்துவ திறன்கள் மற்றும் செயல் திறன் ஆகியவை மேல் அதிகாரிகளால் பாராட்டப்படும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை பெறுவீர்கள்.
வியாபாரிகள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். புதிய முயற்சிகள் மூலம் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
ஆரோக்கியம் மற்றும் கல்வி:
ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும்.
ஒரு சிலருக்கு அலைச்சல் மற்றும் மனதளவில் கவலைகள் ஏற்படக்கூடும். உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
மனம் அமைதி பெறுவதற்கு தியானம் மற்றும் யோகா போன்ற விஷயங்களில் ஈடுபடலாம்.
கல்வித்துறையில் உள்ளவர்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள்.
பரிகாரங்கள்:
கார்த்திகை மாதம் முழுவதும் திங்கட்கிழமைகளில் சிவன் கோயிலில் நடைபெறும் அபிஷேகங்களில் கலந்து கொள்வது நன்மை தரும்.
திங்கட்கிழமை தோறும் கோவில்களுக்கு பச்சரிசி அல்லது பழங்கள் வாங்கி கொடுப்பது கடன் சுமை குறைய உதவும்.
கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு உகந்த மாதம் என்பதால் ஐயப்பனை வழிபடலாம்.
நற்பலன்கள் அதிகரிக்க ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)