Astrology: 18 மாதங்களுக்குப் பிறகு குருவின் ராசிக்கு செல்லும் செவ்வாய்.! 5 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுது.!

Published : Nov 16, 2025, 11:36 AM IST

Mars Transit Sagittarius December 2025: டிசம்பர் மாதத்தில் செவ்வாய் பகவான் தனுசு ராசிக்குள் நுழைய இருக்கிறார். இதனால் சில ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
15
செவ்வாய் பெயர்ச்சி 2025:

ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவரின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும்போதெல்லாம் அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கிறது. 45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றும் செவ்வாய் பகவான் தற்போது விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். இவர் டிசம்பர் 7 ஞாயிற்றுக்கிழமை இரவு 8:27 மணியளவில் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அவரின் இந்த பெயர்ச்சியானது சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை அளிக்கவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
மேஷம்

மேஷ ராசியின் அதிபதியாக விளங்கும் செவ்வாய் பகவான் இந்த பெயர்ச்சியின் போது ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். ஒன்பதாவது இடம் என்பது அதிர்ஷ்டம் மற்றும் ஆன்மீகத்தை குறிக்கும் இடமாகும். செவ்வாயின் இந்த சஞ்சாரத்தால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். உயர்கல்வி அல்லது ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் இருந்த தடைகளில் நீங்கி வெற்றி கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க விரும்புபவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். 

தந்தை வழி உறவுகள் மேம்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த காரியங்கள் நடைபெறும். வேலையில் பதவி உயர்வு, இடமாற்றம், பதவி உயர்வு ஆகியவை கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகளில் துணிச்சலுடன் ஈடுபட்டு வெற்றியைக் காண்பீர்கள்.

35
சிம்மம்

சிம்ம ராசியின் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் சஞ்சரிக்க இருக்கிறார். ஐந்தாம் இடம் என்பது பூர்வ புண்ணியம், புத்திசாலித்தனம், குழந்தைகள் ஆகியவற்றை குறிக்கும் இடமாகும். எனவே இந்த காலகட்டத்தில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கலாம். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி மற்றும் பெருமையை அடைவீர்கள். பிள்ளைகளின் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். 

காதல் உறவுகள் இனிமையாக மாறும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். புதிய வீடு கட்டுவது அல்லது வீடு வாங்குவது, வாகனம் வாங்குவது ஆகிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். பூமி, நிலம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

45
தனுசு

தனுசு ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக உங்களுக்கு அதிகப்படியான ஆற்றலும் தன்னம்பிக்கை உண்டாகும். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் மனப்பான்மை ஏற்படும். பணியிடத்தில் உங்கள் முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்புகள் கிடைக்கலாம். வியாபாரத்தில் இருப்பவர்கள் லாபங்களைப் பெறுவீர்கள். 

சகோதர சகோதரர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். செவ்வாய் பகவான் ஜென்ம ராசியில் இருப்பது உடல் உஷ்ணத்தை அதிகரிக்க செய்யலாம். எனவே ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

55
கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்:

மிதுனம்: மிதுன ராசிக்கு செவ்வாய் ஏழாம் இடத்தில் சஞ்சரிக்க இருப்பதால் திருமணமானவர்கள், கூட்டாக தொழில் செய்பவர்கள் உறவுகளில் சவால்களை சந்திக்க நேரிடலாம். எனவே நிதானத்துடனும், அனுசரித்து செல்ல வேண்டியதும் அவசியம்.

கன்னி: கன்னி ராசியின் நான்காம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் வீடு, வாகனம், தாயின் ஆரோக்கியம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் தேவை.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories