Astrology: விருச்சிக ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்.! அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

Published : Nov 16, 2025, 12:45 PM IST

Mahalakshmi Rajyog lucky zodiac signs: விருச்சிக ராசியில் விரைவில் செவ்வாய் மற்றும் சந்திர பகவான் இருவரும் இணைந்து மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். அதனால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
14
மகாலெட்சுமி ராஜயோகம் 2025

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட இடைவெளியில் தங்களது ராசியை மாற்றுகின்றன. அப்போது அவை பிற கிரகங்களுடன் இணைந்து சுபயோகங்களை உருவாக்குகின்றன. தற்போது செவ்வாய் பகவான் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். விரைவில் சந்திர பகவானும் விருச்சிக ராசிக்கு செல்ல இருக்கிறார். விருச்சிக ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கை மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகிறது. இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் சிறப்பான நன்மைகளை அடைய உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
விருச்சிகம்

விருச்சிக ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் இந்த யோகம் உருவாகுவதால், நீங்கள் மிகுந்த நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை வலுப்பெறும். வேலை செய்து வருபவர்கள் சம்பள உயர்வு, புதிய பொறுப்புக்கள், பதவி உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். தொழில் செய்து வருபவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களை பெறுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை, தைரியம், முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். புதிய வீடு, மனை, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடிவடையும்.

34
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி ராஜயோகம் சிறப்பான நன்மைகளைத் தரும். எதிர்பாராத பண வரப்புக்கு வாய்ப்புகள் உண்டாகும். பரம்பரை சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு பயணங்கள் அல்லது வேலை தொடர்பான பயணங்களால் நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். அரசு வேலைக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கும் சாதகமான காலகட்டமாகும். குடும்ப வாழ்க்கை இனிமையானதாக மாறும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள், சண்டை, சச்சரவுகள் நீங்கி நல்லிணக்கம் ஏற்படும்.

44
மகரம்

மகர ராசியின் 11-வது வீடான லாப ஸ்தானத்தில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதன் காரணமாக வேலை மற்றும் தொழிலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் கிடைக்கலாம். வருமானம் திடீரென அதிகரிக்கும். அனைத்து வழிகளில் இருந்தும் லாபம் கிடைக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதை உயரும். கடன் பிரச்சினைகள் தீர்ந்து மன நிம்மதி கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories