கார்த்திகை மாதம் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் யோகமான பொற்காலமாக அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. சூரியன், சுக்கிரன், சனியின் சஞ்சாரம் காரணமாக நல்ல காலம் தொடங்க உள்ளது.
கிரக நிலைகள்:
மாதத்தின் தொடக்கத்தில் சூரிய பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராசியின் அதிபதியான சனி பகவான் வக்ர நிவர்த்தி ஆகி மூன்றாம் வீட்டில் பலமாக சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை சாதகமான பலன்களைக் கொடுக்கும்.
பொதுவான பலன்கள்:
இந்த மாதம் உங்களுக்கு பொற்காலமாக அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தனிப்பட்ட செல்வாக்கு கூடும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த மனக்குழப்பங்கள் நீங்கி, அனுகூலமான சூழல் நிலவும். பணியிடத்தில் உங்கள் முயற்சிகளுக்கான பலன்கள் கிடைக்கும்.
நிதி நிலைமை:
லாப ஸ்தானத்தில் பல கிரகங்கள் இருப்பதால் பணவரவு அமோகமாக இருக்கும். நிதி நிலைமை மேம்படும். வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகள் பிறக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வதும் மற்ற முதலீடுகளுக்கும் இந்த மாதம் உகந்ததாக இருக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
வேலை மற்றும் தொழில்:
தொழில் மற்றும் உத்தியோகத்தில் ஒரு பொற்காலம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் உங்கள் அர்ப்பணிப்பு, கடின உழைப்புக்கு வெற்றிக்கு வழிவகுக்கும். பணியிடம் மூலம் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள், பிற சாதகமான நிகழ்வுகள் நடக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு தொடர்பான வணிகம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
குடும்ப உறவுகள்:
குடும்ப வாழ்க்கைக்கு சாதகமான நேரமாக இருக்கும். குடும்ப உறவுகள் மேம்படும். குருவின் சஞ்சாரத்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். பிரிந்த கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேர்வீர்கள். காதல் உறவுகளில் சிறு சிறு சண்டைகள் வந்து போகும். எனவே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
ஆரோக்கியம் மற்றும் கல்வி:
மாதத்தின் முதல் பாதி ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. இருப்பினும் கேதுவின் பார்வை காரணமாக நரம்பு கோளாறுகள், முதுகு தண்டுவட கோளாறுகள் போன்றவை ஏற்படலாம். எனவே கவனமாக இருக்க வேண்டும். மாதத்தின் பிற்பகுதியில் சில உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சிறு தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை.
மாணவர்களுக்கு இந்த காலகட்டத்தில் சில கவனச் சிதறல்கள் ஏற்படலாம். எனவே மிகவும் கவனமாக படிக்க வேண்டும். தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுப்பதற்கான வாய்ப்பு இருப்பதால் கடினமாக உழைக்க வேண்டும்.
பரிகாரங்கள்:
சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாரை வழிபடுவது நல்லது. சக்கரத்தாழ்வார் சன்னதிகளுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். துளசி மற்றும் கல்கண்டு படைத்து அதை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குங்கள். கோயிலின் வெளியில் அமர்ந்திருக்கும் யாசகர்களுக்கு ஒருவேளை உணவு வாங்கி கொடுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)