Karthigai Matha Rasi Palan for Viruchiga rasi: இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 17, 2025 அன்று பிறக்க உள்ளது. கார்த்திகை மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
கார்த்திகை மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தையும், மாற்றங்களையும் தரும் மாதமாக அமைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
கிரக நிலைகள்:
மாதத்தின் தொடக்கத்தில் சூரிய பகவான் உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால் ஆளுமை, தலைமைப் பண்பு, மதிப்பு அதிகரிக்கும்.
குரு பகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் கோடி நன்மை உண்டாகும்.
சுக்கிர பகவான் தன ஸ்தானத்திற்கு செல்வதால் பொருளாதாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
பொதுவான பலன்கள்:
சூரியன், செவ்வாய், புதன் ஆகியோர் இணைந்து உங்கள் ராசியில் கூடும் பொழுது சில சில சிறப்பான யோகங்கள் உருவாகின்றன. இது தொழில் மற்றும் வாழ்க்கையில் எதிர்பாராத நற்பலன்களைத் தரும்.
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இருப்பதால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றிகள் குவியும்.
தடைபட்டு வந்த காரியங்கள் இனிதே முடிவடையும்.
செவ்வாயின் சஞ்சாரம் புதிய திருப்பங்களையும், இடம் மாற்றங்கள் தொடர்பான நல்ல செய்திகளையும் கொண்டு வரலாம்.
நிதி நிலைமை:
மாதத்தின் தொடக்கத்தில் சுக்கிரன், செவ்வாய், புதன் ஆகியோர் ஒரே ராசியில் இணைவதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கரைந்து போன சேமிப்புகளை ஈடு கட்டுவீர்கள்.
பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.
அடகு வைத்த நகைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
முதலீடுகள், பங்குச் சந்தைகள் போன்றவற்றின் மூலம் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
வேலை மற்றும் தொழில்:
தொழில் மற்றும் வணிகத்தில் எதிர்பாராத நன்மைகளை அனுபவிப்பீர்கள். உயர் பதவிகள் தேடி வரலாம்.
வியாபாரிகள் வணிகத்தை விரிவு படுத்துவதற்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
சொந்தமாக தொழில் செய்து வருபவர்களுக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.
வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் நிதி ஆதாயங்களை தரும்.
குடும்ப உறவுகள்:
உறவுகளில் அன்பும், பாசமும் அதிகரிக்கும். பெற்றோர்கள் அல்லது நண்பர்களிடமிருந்து தேவையான ஆதரவு கிடைக்கும்.
பிள்ளைகளுக்கு திருமணம் போன்ற சுப காரியங்கள் சிறப்பாக நடைபெறும்.
புது வீடு கட்டுவது அல்லது வாகனம் வாங்குவது போன்ற ஆசைகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
ஆரோக்கியம் மற்றும் கல்வி:
பொதுவாக உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. பதட்டம், மனசோர்வு போன்ற சிறிய ஆரோக்கிய பிரச்சனைகள் வரலாம்.
இருப்பினும் கிரகங்களின் சஞ்சாரம் காரணமாக ஆரோக்கியம் சிறப்படையும்.
உடற்பயிற்சி, தியானம், ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஆகியவை நன்மை பயக்கும்.
மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள்.
முதுகலை மாணவர்கள் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
பரிகாரங்கள்:
உச்சம் பெற்று வக்ரமடையும் குருவின் நன்மைகளைப் பெறுவதற்கு வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள்.
ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
சனிக்கிழமைகளில் சனி பகவான் சன்னதியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.
முதியோர் இல்லங்கள் அல்லது ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உங்களால் முடிந்த அன்னதானம் அல்லது உடைதானம் செய்யுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)