Karthigai Matha Rasi Palan for Dhanusu rasi: இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 17, 2025 அன்று பிறக்க உள்ளது. கார்த்திகை மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
கார்த்திகை மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு சவால்களையும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களையும் கலந்து கொடுக்கும் மாதமாக இருக்கும். இந்த மாதம் கடின உழைப்பு மற்றும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.
கிரக நிலைகள்:
இந்த மாதம் சனிபகவான் தனுசு ராசியின் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.
குரு பகவான் ஏழாம் வீட்டில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் ஆகியோர் மாத தொடக்கத்தில் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றனர்.
பொதுவான பலன்கள்:
சனி பகவானின் சஞ்சாரம் காரணமாக மனதில் ஒருவித சோர்வு நீடிக்கலாம். எளிதாக செய்யக்கூடிய காரியங்கள் கூட மலைப்பாகத் தோன்றக் கூடும்.
மாதத்தின் இரண்டாம் பகுதியில் குருவின் வக்ர நிவர்த்திக்கு பிறகு உங்கள் முயற்சிகள் கைகூடும். புதிய வாய்ப்புகள் உருவாகும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும்.
நண்பர்கள் போல பழகும் சிலரே உங்களுக்கு துரோகம் செய்யலாம். எனவே யாரையும் கண்மூடித்தனமாக நம்புவது கூடாது.
நிதி நிலைமை:
மாதத்தின் தொடக்கத்தில் செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. விரய ஸ்தானத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தால் வீண் விரயங்கள் அல்லது எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.
நிதி திட்டமிடல் அவசியம். சனி மற்றும் குருவின் வக்ர நிவர்த்திக்கு பிறகு நிலைமை மாறலாம். குருவின் அருளால் இரட்டிப்பு லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த பணம் கிடைப்பதற்கான வழிகள் பிறக்கும்.
முதலீடுகள் குறித்து நிதானமாக முடிவு எடுப்பது நல்லது.
வேலை மற்றும் தொழில்:
வேலை சம்பந்தமாக நீண்ட தூர பயணங்கள் செல்ல வேண்டி இருக்கலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.
கடின உழைப்பை தொடர வேண்டியது அவசியம். தொழில் மற்றும் வணிகம் செய்து வருபவர்களுக்கு மாதத்தின் ஆரம்பம் சிறப்பாக இருக்கும்.
குருவின் நிலை மாற்றத்திற்கு பிறகு தொழிலில் வளர்ச்சி ஏற்படலாம். கடின உழைப்பின் மூலம் முன்னேற்றத்தை அடைவீர்கள்.
குடும்ப உறவுகள்:
குடும்ப வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை ஏற்படும். ஒருவருக்கொருவர் பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள்.
குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். காதல் உறவுகளின் அடிப்படையில் இந்த மாதம் சராசரியாக இருக்கும்.
சில சவால்களை சந்திக்க வேண்டி இருக்கலாம். துணிச்சலுடன் எதிர்கொண்டால் உறவை கையாள முடியும்.
திருமணமானவர்களுக்கு மாதத்தின் ஆரம்பம் சற்று பலவீனமாக இருக்கலாம். ஆனால் மாதத்தின் இரண்டாம் பகுதி ஓரளவுக்கு ஆறுதலாக இருக்கும்.
ஆரோக்கியம் மற்றும் கல்வி:
ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல்நலப் பிரச்சினைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சிறிய உபாதைகளையும் அலட்சியம் செய்ய வேண்டாம். சனி பகவானின் நிலை காரணமாக மனச்சோர்வு, மனப்பதற்றம் ஆகியவை ஏற்படலாம்.
மாணவர்களுக்கு இந்த மாதம் சாதகமாக இருக்கும்.
புதன் பகவானின் பார்வை காரணமாக கல்வித்துறையில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். தேர்வுகளில் சிறந்த முடிவுகள் கிடைக்கும்.
பரிகாரங்கள்:
தனுசு ராசிக்கு அதிபதியான குரு பகவானை வியாழக்கிழமைகளில் வழிபடுவது நல்லது.
கோவிலுக்கு சென்று தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்கள் சமர்ப்பித்து, கொண்டைக்கடலை தானம் செய்யலாம்.
சனியின் தாக்கம் இருப்பதால் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபடுவது, சனீஸ்வர பகவான் சன்னதியில் எள் தீபம் ஏற்றுவது நன்மை பயக்கும்.
குலதெய்வ வழிபாடு மூலம் தடைகள் விலகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)