Astrology: குரு, சுக்கிரன், சந்திரன் கூட்டணி! ஜூன் 17 முதல் இந்த 3 ராசிகளுக்குப் புதையல் அடித்தது போல யோகம்!

Published : Jun 12, 2026, 05:18 PM IST

Gajkesari Rajyog: கடக ராசியில் சுப கிரகங்களான குரு மற்றும் சுக்கிரன் இணைந்து கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்குகிறது. ஜூன் 19  இந்த யோகம் நீடிக்கும். இந்த கிரகங்களின் சேர்க்கையால் 3 ராசிகளுக்கு ஜாக்பாட்.

PREV
14
கஜகேசரி ராஜயோகம்

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் சுழற்சி மற்றும் சேர்க்கை காரணமாக மனித வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை சந்திக்கின்றனர். அந்த வகையில், 2026 ஜூன் 17ம் தேதி புதன்கிழமை காலை 8:12 மணிக்கு, சந்திரன் தனது சொந்த ராசியான கடகத்திற்குள் நுழைகிறார். ஏற்கனவே கடக ராசியில் சுப கிரகங்களான குரு மற்றும் சுக்கிரன் இணைந்து கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்குகிறது. ஜூன் 19 காலை 10:06 மணி வரை இந்த யோகம் நீடிக்கும். இந்த கிரகங்களின் சேர்க்கையால் கன்னி, தனுசு, துலாம் ஆகிய 3 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது.

24
கன்னி

கன்னி ராசிக்கு 11-வது வீடான லாப ஸ்தானத்தில் இந்த கஜகேசரி யோகம் நிகழ்வதால், உங்களுக்கு மங்களகரமான பலன்கள் தேடி வரப்போகின்றன. புதிய நிலம், வீடு அல்லது வாகனம் வாங்க வேண்டும் என்ற உங்கள் கனவு நனவாகும். முதலீடுகள் செய்ய இதுவே சிறந்த நேரம். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளும், உயர் அதிகாரிகளின் பாராட்டுகளும் உங்களைத் தேடி வரும். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன காரியங்கள் மற்றும் உங்களது நீண்ட கால ஆசைகள் அனைத்தும் நிறைவேறப்போகிறது.

Surya Gochar 2026: இனி 1 மாதத்திற்கு இவங்கதான் ராஜா! ஜூன் 15 சூரிய பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் 5 ராசிகள்!

34
தனுசு

தனுசு ராசியின் 8-வது வீட்டில் இந்த யோகம் உருவாவதால், எதிர்பாராத பல திருப்பங்கள் ஏற்படப்போகின்றன. உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும், உதவியும் உங்களுக்குக் கிடைக்கும். வருமானம் உயர புதிய வழிகள் பிறக்கும். பரம்பரைச் சொத்துக்கள் அல்லது உயில் மூலமாக உங்களுக்குத் திடீர் பண வரவும், பெரும் நிதி ஆதாயமும் உண்டாகும். பணியிடத்தில் உங்களைச் சுற்றி இருந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். சமூகத்தில் உங்களுக்கான மரியாதையும் அந்தஸ்தும் உயரும்.

44
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் மன அமைதியையும், தொழில் வளர்ச்சியையும் அள்ளித் தரப்போகிறது. நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்த மன அழுத்தம் மற்றும் சிறுசிறு ஆரோக்கியப் பிரச்சனைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து வேலை கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கப் பெறும். திருமணமாகாத துலாம் ராசியினருக்கு நல்ல வரன் அமைந்து திருமணக் காரியங்கள் கைகூடும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நல்லபடியாக நடக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories