Shani Nakshatra Gochar 2026: ஜூலை 2 முதல் 4 ராசிகளுக்கு 'பம்பர் லாட்டரி'.. சனி பகவான் தரும் அதிர்ஷ்ட மழை!

Published : Jun 12, 2026, 02:08 PM IST

Shani Nakshatra Gochar 2026: சனி பகவான் நட்சத்திர பெயர்ச்சி அடைய உள்ளதால் ஜூலை 2 முதல் இந்த 4 ராசிகளுக்கு 'பம்பர் லாட்டரி' அதிர்ஷ்டம் கொட்ட போகிறது. அவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து பார்ப்போம்.

PREV
15
சனி பகவான் தரும் அதிர்ஷ்ட மழை

நவகிரகங்களில் கர்ம காரகன், நீதி அரசன் என்று போற்றப்படும் சனிபகவான், ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவதில் முதன்மையானவர். மந்த காரகன் என்று அழைக்கப்படும் சனிபகவான் மிக மெதுவாக நகரக்கூடியவர் என்பதால், அவரது சிறிய அளவிலான இடப்பெயர்ச்சியோ அல்லது நட்சத்திர மாற்றமோ கூட அனைத்து ராசிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போது ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான், வரும் ஜூலை 2ஆம் தேதி அன்று அதே நட்சத்திரத்தின் 2-ம் பாதத்திற்குள் நுழைய உள்ளார். சனியின் இந்த நட்சத்திர பாத மாற்றம் சில ராசியினருக்கு சோதனைகளைத் தந்தாலும், குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழையை பொழிய வைக்கப் போகிறது. அந்த அதிர்ஷ்டசாலி ராசிகள் யார் யார் என்பது குறித்து பார்ப்போம்.

25
ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு சனிபகவானின் இந்த நட்சத்திர மாற்றம் அமோகமான நற்பலன்களை அள்ளித் தரவுள்ளது. பணியிடங்களில் நீடித்துவந்த இழுபறிகள், தடைகள் அனைத்தும் நீங்கும். புதிய உயரங்களை எட்டுவதோடு, உயர் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும்.

வியாபாரம்: தொழிலில் புதிய கூட்டு ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்பாராத லாபம் கிடைப்பதுடன், புதிய முதலீடுகளும் லாபகரமாக அமையும்.

குடும்பம் மற்றும் ஆரோக்கியம்: கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்று சாதனை படைப்பார்கள்.

35
மிதுனம்

புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி நேயர்களுக்கு, சனியின் இந்த பாத மாற்றம் சாதகமான பலன்களையே தரப்போகிறது. உங்களின் கடின உழைப்பிற்கும், அர்ப்பணிப்பிற்கும் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் உங்களை உற்சாகப்படுத்தும்.

பொருளாதாரம்: வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். நிதி நிலைமை கணிசமாக உயரும்.

பயணங்கள்: தொழில் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளும் பயணங்கள் சாதகமான மற்றும் நேர்மறையான முடிவுகளைத் தரும்.

நிம்மதி: நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த சட்ட ரீதியான சிக்கல்களில் இருந்து மதியூகத்தால் விடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

45
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமையப் போகிறது. வீட்டில் ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதார வளம் பெருகி, வாழ்க்கையில் நிம்மதியும் செழிப்பும் உண்டாகும்.

சொத்து சேர்க்கை: நீண்ட நாள் கனவாக இருந்த புதிய வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்கும் யோகம் கைகூடி வரும்.

திருமணம்: வரன் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, மனதிற்கு பிடித்த நல்ல வாழ்க்கைத்துணை அமைய வாய்ப்புகள் கூடிவரும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி அடைவார்கள்.

55
மீனம்

மீன ராசியினருக்கு சனியின் இந்த நட்சத்திரப் பாத மாற்றம் எதிர்பாராத பல திருப்பங்களையும், திடீர் யோகங்களையும் கொண்டு வரவுள்ளது. தொட்ட காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு இருப்பதால், புதிய முயற்சிகளில் துணிந்து இறங்கலாம்.

வியாபாரம்: தொழிலை விரிவாக்கம் செய்ய நினைப்பவர்களுக்கு இது ஏற்ற காலம். புதிய தொழில் தொடங்கவும் நல்ல சூழல் அமையும்.

ஆரோக்கியம்: மன உளைச்சல்கள் நீங்கி, மன அமைதி கூடும். பெரிய அளவிலான உடல்நல பாதிப்புகள் எதுவும் இன்றி ஆரோக்கியம் சிறக்கும்.

வேலை சூழல்: உத்தியோகத்தில் சுமுகமான சூழல் நிலவுவதால், கொடுக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்திற்கு முன்பே முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

சனிபகவானின் இந்த நட்சத்திர மாற்றம் மேலே குறிப்பிட்டுள்ள ராசிகளுக்குப் பொதுவான பலன்களையே வழங்கும். தனிப்பட்ட ஜாதக அமைப்பிற்கு ஏற்ப பலன்களில் சிறு மாற்றங்கள் இருக்கக்கூடும்.

Read more Photos on
click me!

Recommended Stories