Astrology : அதிர்ஷ்டம் தரும் கஜலட்சுமி ராஜயோகம் – இனி காசு, பணம் வந்துகிட்டே இருக்கும்; இந்த ராசிக்கு ஜாலி தான்!

Published : Aug 03, 2025, 12:00 PM IST

Jupiter Venus Conjunction : சுக்கிரன்-குரு கூட்டணி அதிர்ஷ்டத்தைத் தருகிறது. ஆகஸ்ட் 12, 2025 அன்று, செல்வம் மற்றும் செழிப்பின் கிரகமான சுக்கிரன், குருவுடன் இணைகிறார். இந்த கூட்டணி கஜலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகிறது.

PREV
16
சுக்கிரன்-குரு கூட்டணி - கஜலட்சுமி ராஜயோகம்

ஜோதிடத்தில் சுப கிரகங்களான குரு மற்றும் சுக்கிரன் இணையும் போது கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இது செல்வ செழிப்பு, மகிழ்ச்சியான வாழ்க்கை, கலை மற்றும் ஞானம், சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும் இப்படி பல சுப பலன்களை இந்த 2 கிரகங்கள் இணைவதால் கிடைக்கும். இந்த பலன்களை அனுபவிக்க கூடிய ராசிகள் யார் யார் என்று பார்க்கலாம்.

26
மேஷ ராசிக்கான கஜலட்சுமி ராஜயோகம்:

குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் கஜலட்சுமி யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பல வழிகளிலிருந்து காசு, பணம் வந்து சேரும். இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் எந்த வேலையிலும் வெற்றி பெறுவீர்கள். மேலும், இந்த யோகம் காரணமாக குடும்ப வாழ்க்கையில் ஒற்றுமையும் நிலவும்.

36
குரு சுக்கிரன் சேர்க்கை பலன் - ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு கஜலட்சுமி யோகம் சாதகமான பலன்களை கொடுக்கும். இந்த யோகத்தின் காரணமாக வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். சட்ட விஷயங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள். இனி தொட்ட காரியங்கள் வெற்றி தரும்.

46
மிதுன ராசிக்கான குரு சுக்கிரன் சேர்க்கை பலன்:

கஜலட்சுமி ராஜயோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த யோகத்தின் காரணமாக தன்னம்பிக்கை அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் நிலைத்தன்மையும் நேர்மறையான மாற்றங்களும் காணப்படும். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். நிதி லாபம் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும்.

56
கஜலட்சுமி ராஜயோகம் - துலாம் ராசிக்கான பலன்கள்:

சுக்கிரன் மற்றும் குருவின் சேர்க்கையால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகும், இது துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த யோகத்தின் நல்ல பலன்கள் காதல் உறவுகள், திருமண மகிழ்ச்சி மற்றும் சமூக மரியாதையை அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும். வியாபாரத்தில் நிதி லாபம் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும்.

66
சுக்கிரன் குரு சேர்க்கையால் உருவாகும் கஜலட்சுமி யோகம்: கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மற்றும் குருவின் கஜலட்சுமி ராஜயோகம் நன்மை பயக்கும். இந்த யோகத்தின் நல்ல பலன்கள் வியாபாரத்தில் நிதி லாபத்தைத் தரும். செல்வ வாய்ப்புகள் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories