Zodiac Signs: 30 ஆண்டுகளுக்குப் பின் சனி பகவான் உருவாக்கும் விபரீத ராஜயோகம்.. இந்த ராசிகளுக்கு கஷ்டம் தீரப் போகுது

Published : Aug 03, 2025, 11:27 AM IST

சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் விபரீத ராஜயோகத்தை உருவாக்குகிறார். இது சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரவுள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் காணலாம்.

PREV
14
சனி பகவான் உருவாக்கும் ராஜயோகம்

சனி பகவான் தற்போது மீன ராசியில், வக்ர நிலையில் (பின்னோக்கி செல்வது போன்ற தோற்றம்) பயணித்து வருகிறார். சனி பகவான் மீனத்தில் வக்ர நிவர்த்தி அடையும் பொழுது சில ராசிகளுக்கு விபரீத ராஜயோகம் உருவாகும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சனி பகவான் பொதுவாக ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் வரை இருப்பார். அவர் ஒரு ராசியை முழுமையாக சுற்றிவர முப்பது ஆண்டுகள் ஆகும் என்பதால் இந்த ராஜயோகம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைப்பது அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த யோகம் ஒருவருக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. சிம்ம ராசியில் ஆறு மற்றும் ஏழாவது வீட்டின் அதிபதியான சனி பகவான் எட்டாவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிப்பதால் விபரீத ராஜயோகம் உருவாகிறது.

24
மிதுன ராசி

இந்த ராஜயோகம் சில ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தரவுள்ளது. இதனால் கஷ்டங்கள் நீங்கி 4 ராசிகள் பிரகாசிக்க உள்ளன. அவர்களில் முதலானவர்கள் மிதுன ராசிக்காரர்கள். மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரமும், வெகுமதியும் கிடைக்கும். வேலையில்லாமல் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு நல்ல இடத்தில், நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். வேலை மாறுதலுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரலாம். நேர்முகத் தேர்வு முடித்துவிட்டு காத்திருப்பவர்களுக்கு விரைவில் அந்த வேலை கிடைக்கலாம். பணியிடத்தில் புதிய பொறுப்புகள், பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். இந்த ராஜயோகம் வாழ்க்கையில் புதிய நேர்மறை மாற்றங்களை கொண்டு வரும்.

34
சிம்மம் மற்றும் துலாம்

சிம்ம ராசியின் ஆறு மற்றும் ஏழாவது வீட்டின் அதிபதியான சனிபகவான் எட்டாவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதன் காரணமாக சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க உள்ளது. கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் முன்னேற்றத்தை காண இருக்கிறீர்கள். சனியின் பார்வை கர்ம பாவத்தில் விழுவதால் வேலையில் பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. அதேபோல் துலாம் ராசிக்காரர்களுக்கும் தொழில் வாழ்க்கையில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். செல்வாக்கு மிக்கவர்களின் அறிமுகம் கிடைத்து, அதன் மூலம் புதிய வாய்ப்புகள் உருவாகும். உங்களின் கடின உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய முதலீடுகளும், ஏற்கனவே செய்த முதலீடுகளும் நல்ல லாபத்தைத் தரும். திடீர் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்க இருப்பதால் துலாம் ராசிக்காரர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

44
தனுசு ராசி

விபரீத ராஜயோகமானது தனுசு ராசிக்காரர்களுக்கும் எதிர்பாராத நன்மைகளை கொண்டு வரவுள்ளது. நீண்ட காலமாக இருந்த கஷ்டங்கள் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு கஷ்டங்கள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். நிதிநிலைமை வலுப்பெறும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபமும், வருமானமும் கிடைக்கும். தொழில் செய்து வருபவர்களுக்கு கடின உழைப்புக்கான முழுமையான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத வழிகளில் பணம் சேர வாய்ப்பு உள்ளது. திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். கடன் பிரச்சனைகளால் தவித்து வருபவர்களுக்கு கஷ்டங்கள் தீரும் காலம் நெருங்கியுள்ளது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஜோதிடப் பலன்கள் பொதுவானவை. இதன் நம்பகத்தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. ஒவ்வொருவரின் ஜாதகமும் தனித்துவமானது. ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலை, தசா புத்தி ஆகியவற்றை பொறுத்து பலன்கள் மாறுபடும் என்பதால் அனுபவம் மிக்க ஜோதிடரை அணுகி கலந்தாலோசிப்பது நல்லது)

Read more Photos on
click me!

Recommended Stories