Guru Peyarchi 2026: ரிஷப ராசிக்கு ஜாக்பாட்! 3-ல் அமரும் உச்ச குருவால் குவியப்போகும் செல்வம்.. அதிர்ஷ்ட பலன்கள் இதோ!

Published : Apr 22, 2026, 05:30 AM IST

Jupiter Transit 2026 Taurus Star Wise Predictions in Tamil : 2026 குரு பெயர்ச்சியால் ரிஷப ராசியில் உள்ள கார்த்திகை, ரோகிணி மற்றும் மிருகசீரிஷம் நட்சத்திரங்களுக்குக் கிடைக்கப்போகும் தனித்துவமான பலன்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் குறித்து பார்க்கலாம்.

PREV
19
ரிஷப ராசிக்கான குரு பெயர்ச்சி 2026 பலன்

ரிஷப ராசி அன்பர்களே, 2026-ம் ஆண்டு நிகழும் குரு பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தப் போகிறது. உங்கள் ராசிக்கு 2-ம் இடமான மிதுனத்தில் இருந்த குரு பகவான், ஜூன் மாதம் முதல் 3-ம் இடமான உச்ச வீடான கடக ராசிக்குள் அதிகாலை 2.25 (நேரம் மாறுபடக் கூடும்) மணிக்கு நுழைகிறது. இந்த பெயர்ச்சி ரிஷப ராசியினருக்கு வாழ்வில் ஒரு மைல்கல்லாக அமையப்போகிறது என்பது ஜோதிடர்களின் கணிப்பு.

29
குரு பெயர்ச்சி 2026 ரிஷபம் பரிகாரம்

இந்த பெயர்ச்சியின் போது குரு பகவான் தனது தற்போதைய இடமான மிதுன ராசியிலிருந்து வெளியேறி, தனது உச்ச வீடான கடக ராசிக்கு இடம்பெயர்கிறார். பொதுவாகவே ரிஷப ராசியினர் வசதி வாய்ப்புகளை விரும்புபவர்கள் மற்றும் செயல்களில் நேர்த்தி உடையவர்கள் என்பதால், இந்த உச்ச குருவின் காலக்கட்டம் அவர்களுக்குப் பல சாதகமான மாற்றங்களைக் கொண்டு வரவுள்ளது. இந்த பெயர்ச்சியால் ரிஷப ராசியினருக்கு கிடைக்கப்போகும் மிக முக்கியமான பலன் 'திருமண யோகம்' ஆகும். நீண்ட காலமாகத் திருமணத் தடைகளைச் சந்தித்து வந்தவர்களுக்கு, குருவின் அருளால் வரன்கள் கைகூடி மங்கள நிகழ்வுகள் இல்லத்தில் அரங்கேறும்.

39
2026 குரு பெயர்ச்சி பலன் ரிஷப ராசி

அதேபோல், ஏதோ ஒரு காரணத்தினால் மனஸ்தாபம் ஏற்பட்டுப் பிரிந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் இந்த காலகட்டத்தில் மீண்டும் இணைந்து இன்பம் காண்பார்கள். வேலை மற்றும் தொழில் ரீதியாகப் பார்த்தால், நீண்ட நாட்களாகக் கனவாகவே இருந்து வந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு இப்போது நனவாகும். வருமானத்தைப் பொறுத்தவரை, நீங்கள் எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருப்பதோடு, தொழிலில் இதுவரை இல்லாத அளவிற்கு லாபத்தைப் பார்க்க முடியும்.

உச்ச குரு தரும் அதிர்ஷ்டம்; பண மழையில் நனையப்போகும் மேஷ ராசி! 2026 குரு பெயர்ச்சியால் காத்திருக்கும் ராஜயோகம்!

49
ரிஷப ராசி 2026 குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்

ஜோதிட ரீதியாக ஒரு சந்தேகம் எழலாம். அதாவது குரு பகவான் ராசிக்கு 3 ஆம் இடத்தில் அமர்வது பலன் தருமா என்ற கேள்வி கேட்பார்கள். குரு பகவான் அமரும் இடத்தை விட, அவர் பார்க்கும் இடங்களுக்குத் தான் 'கோடி நன்மை' உண்டு என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. அந்த வகையில், 3ல் அமரும் குருவின் பார்வை பலன்களால் உங்களுக்குச் சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிப்பதோடு, கௌரவமான பதவிகளும் தேடி வரும்.

59
நட்சத்திர பலன் குரு பெயர்ச்சி 2026 ரிஷப ராசி

குறிப்பாக, நீண்ட நாட்களாகக் குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருப்பவர்களுக்கும், திருமணப் பேச்சு வார்த்தைகள் தள்ளிப்போனவர்களுக்கும் இந்தப் பெயர்ச்சி ஒரு மிகப்பெரிய நற்செய்தியைத் தரும். மொத்தத்தில், இந்த உச்ச குருவின் சஞ்சாரம் ரிஷப ராசி அன்பர்களின் வாழ்வில் இருந்த தேக்க நிலையை மாற்றி, வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் ஒரு உன்னதமான காலமாக அமையும்.

Wednesday Astrology: வேலையில் ராஜயோகம் கிடைக்கணுமா? இந்த பரிகாரங்களைச் செஞ்சா நீங்கதான் அடுத்த பாஸ்!

69
கார்த்திகை (2, 3, 4-ம் பாதம்):

சூரிய பகவானை அதிபதியாக கொண்ட கார்த்திகை நட்சத்திர அன்பர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி அலைச்சலை கொடுத்தாலும் உங்களது ஆளுமை திறமை அதிகரிக்க செய்யும். அரசு வழி காரியங்கள் எல்லாம் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்கள் சொல்லுக்கு மதிப்பு கூடும். கடினமான வேலைகளையும் சாதாரணமாகச் செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சிவபெருமானுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வர எல்லா நன்மையும் உண்டாகும்.

79
ரோகிணி நட்சத்திரம்

சந்திரனை அதிபதியாகக் கொண்ட ரோகிணி நட்சத்திர அன்பர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மன ரீதியாக அமைதியும், மகிழ்ச்சியும் தரும். திருமணத் தடை நீங்கும். சுபகாரியங்கள் எளிதில் நடந்து முடியும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் தேடி வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மீடியத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். துர்க்கை மற்றும் பார்வதி தேவியை திங்கள்கிழமை தோறும் வழிபாடு செய்ய மன குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.

89
மிருகசீரிஷம் (1, 2-ம் பாதம்)

செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மிருகசீரிஷ நட்சத்திர அன்பர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். நிலம், வீடு, வண்டி, வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றியாகும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறையில் இருப்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். விளையாட்டுத்துறையை சேர்ந்தவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். முருகப்பெருமானுக்கு செவ்வாய்தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய தடைகள் நீங்கும்.

99
பொறுப்பு

இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள பலன்கள் மற்றும் ஜோதிடத் தகவல்கள் அனைத்தும் பொதுவான கணிப்புகளே ஆகும். இவை தனிநபரின் பிறந்த ஜாதகம், தசாபுத்தி மற்றும் கிரக நிலைகளுக்கு ஏற்ப மாறுபடக்கூடும். வாசகர்கள் இந்தத் தகவல்களைத் தங்களின் மேலான அறிவைப் பயன்படுத்திப் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதில் கூறப்பட்டுள்ள பலன்கள் மற்றும் பரிகாரங்களால் ஏற்படும் விளைவுகளுக்கு இந்தத் தளத்தின் நிர்வாகமோ அல்லது ஆசிரியரோ பொறுப்பேற்க மாட்டார்கள். ஒரு முக்கிய முடிவை எடுக்கும் முன் தகுந்த ஜோதிட நிபுணரை ஆலோசிப்பது சிறந்தது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories