Astrology: உங்கள் ராசி இதுவா? ஜூலை மாதத்தில் சூரியன், புதன், சுக்கிரன் தரும் மாற்றங்களால் காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்!

Published : Jun 24, 2026, 10:11 AM IST

July month Horoscope: நவகிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான குணாதிசயங்களை கொண்டது. வரும் ஜூலை மாதம் மிக முக்கியமான கிரக மாற்றங்கள் நிகழவுள்ளன. இதனால் இந்த 4 ராசிகாரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது.

PREV
15
கிரகப் பெயர்ச்சி

ஜோதிட சாஸ்திரத்தின்படி நவகிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான குணாதிசயங்களை கொண்டது. இவை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் ராசிகளை மாற்றிக்கொண்டே இருக்கும். இதனை நாம் கிரகப் பெயர்ச்சி என்கிறோம். அந்த வகையில், வரும் ஜூலை மாதம் மிக முக்கியமான கிரக மாற்றங்கள் நிகழவுள்ளன. ஆடம்பரம் மற்றும் மகிழ்ச்சியின் அதிபதியான சுக்கிரன், புத்தி கூர்மை மற்றும் வணிகத்தின் காரகனான புதன், கிரகங்களின் அரசனான சூரியன் ஆகிய மூன்று கிரகங்களும் தங்களின் ராசி நிலையை மாற்றுகின்றன. இவர்களுடன் சேர்ந்து, மிக மெதுவாக நகரும் சனி பகவானும் தனது இயக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளார். இந்த மகா கிரக மாற்றங்களால், ஜூலை மாதத்தில் இந்த 4 ராசிகாரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது.

25
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் ஒரு புதிய விடியலை ஏற்படுத்தப்போகிறது. நீண்ட நாட்களாக முடங்கி கிடந்த வேலைகள் சுறுசுறுப்படையும். அலுவலகத்தில் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கப் பிரகாசமான வாய்ப்புள்ளது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்த மாதம் மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தரும். உங்கள் தன்னம்பிக்கையும் தைரியமும் இரட்டிப்பாகும். வருமானத்தை அதிகரிக்க புதிய பாதைகள் திறக்கும்.

35
துலாம்

துலாம் ராசியினருக்குப் பல திருப்பங்களும், சாதனைகளும் நிறைந்த மாதமாக ஜூலை மாதம் இருக்கப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் புதிய சாதனைகளைப் படைப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைப்பதுடன், சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பும் கௌரவமும் உயரும். நிதி நிலைமையில் எதிர்பாராத திடீர் முன்னேற்றம் ஏற்பட்டு மனமகிழ்ச்சியைத் தரும். இக்கட்டான சூழல்களில் உங்கள் நண்பர்களும், உறவினர்களும் உங்களின் பக்கபலமாக நிற்பார்கள்.

45
மகரம்

மகர ராசியினருக்குப் பண ரீதியாகப் பல அரிய வாய்ப்புகள் தேடி வரப்போகிறது. நீங்கள் சிந்திய வியர்வைக்கும், கடின உழைப்பிற்கும் ஏற்ற தகுந்த பலன்கள் இந்த மாதம் கிடைக்கப்போகிறது. தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அதிக லாபம் தரக்கூடிய புதிய பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். முன்பு யாருக்காவது கடனாகக் கொடுத்துத் திரும்ப வராது என்று நினைத்த பணம் கைக்கு வந்து சேரும்.

55
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் அனைத்து நன்மைகளையும் வாரி வழங்க போகிறது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற நல்ல வேலை அமையும். ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்குப் கூடுதல் பொறுப்புகளும், முக்கியத்துவமும் கிடைக்கும். கூட்டுத் தொழில் அல்லது தனி வியாபாரத்தில் இருப்பவர்கள் நல்ல லாபத்தை ஈட்டுவார்கள். இந்த மாதத்தில் உங்களுக்கு ஆன்மீக வழிபாடுகளிலும், மதச் சடங்குகளிலும் ஆர்வம் அதிகரிக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories