
2026 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும், ஏனெனில் இந்த மாதத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் ராசி மாறுவார்கள். இந்த கிரகங்களின் ராசி மாற்றம் 12 ராசிக்காரர்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி, ஜனவரி 2026 மாதம் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கிறது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஜனவரி 2026-ல் சுக்கிரன், சூரியன், செவ்வாய், புதன் ராசி மாறுகின்றனர். இதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்கும். உங்கள் மாத ராசிபலனை தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷ ராசியினரைப் பொறுத்த வரையில் ஜனவரி மாதம் எல்லா வகையிலும் நன்மை தரும் ஒரு மாதமாக இருக்கும். ஆண்டின் முதல் மாதத்தில் பிள்ளைகளால் ஆதரவு கிடைக்கும். பண ஆதாயம் உண்டாகும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பண பரிவர்த்தனையில் கவனம் தேவை. புதிய தொழில் தொடங்க சிறந்த நேரம்.
பொதுவாக ரிஷப ராசியினரைப் பொறுத்த வரையில் ஜனவரி மாதம் புதிய வீடு அல்லது அசையா சொத்து வாங்கலாம். சமூகத்தில் மதிப்பு உயரும். அனுபவ ஆலோசனையுடன் புதிய வேலையைத் தொடங்கவும். சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். காதல் உறவில் விரிசல் வரலாம்.
2026ஆம் ஆண்டு புத்தாண்டு தொடக்கத்தின் முதல் மாதமான ஜனவரி மாதத்தை பொறுத்த வரையில் மிதுன ராசியினருக்கு மாமியார் வீட்டில் இருந்து ஆதரவு கிடைக்கும். ஆனால், அலுவலகத்தில் வேலையில் கவனமாக இருப்பதோடு மட்டுமின்றி பணியிடத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும். துணையுடன் கருத்து வேறுபாடு வரலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் வண்டியில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
கடக ராசியினரைப் பொறுத்த வரையில் காதல் உறவுகளில் வெற்றி கிடைக்கும். பண பரிவர்த்தனையில் கூடுதல் கவனம் தேவை. வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையிலான உறவில் அந்நியோன்யம் அதிகரிக்கும். காதல் ஜோடிகளுக்கு அமோகமான ஒரு மாதமாக இந்த ஜனவரி மாதம் இருக்கும்.
சிம்ம ராசியினரைப் பொறுத்த வரையில் கடந்த சில நாட்களாக வேலையில் மந்த நிலை இருந்து வருவதால் கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். நோய் தொந்தரவு இருக்கும். உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி ராசி நேயர்களே, இந்த மாதம் உங்களது வரவு செலவு கணக்குகளில் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும். வரவைக் காட்டிலும் செலவுகள் கூடும். பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிகமாக வரும். தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வெளி உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.
துலாம் ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் திருமண வரன் தேடி வரும். ஒரு சிலருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடியும். ஒரு சிலருக்கு இந்த மாதம் 2ஆவது குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க சாதகமான நேரம். பிஸினஸில் லாபம் அதிகரிக்கும். வேலையில் உங்கள் செயல்திறன் சிறப்பாக இருக்கும். படிக்காமல் எந்த ஆவணத்திலும் கையெழுத்திட வேண்டாம். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும்.
விருச்சிக ராசியினருக்கு ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தொடரும். இந்த மாதம் புதிய வாகனம் வாங்கலாம். வருமானம் அதிகரிக்கும். சொத்து சம்பந்தமாக குடும்பத்தில் தகராறு ஏற்படலாம். சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.
பொதுவாக தனுசு ராசியினரைப் பொறுத்த வரையில் உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள். இந்த மாதம் தனுசு ராசியினருக்கு பண விஷயத்தில் தட்டுப்பாடு ஏற்படக் கூடும். மாதத்தின் நடுப்பகுதியில் நல்ல செய்திகள் தேடி வரும். பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் யாவும் நீங்கும். மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் சக போட்டியாளர்களை அனுசரித்து செல்வது நன்மை அளிக்கும்.
இந்த மாதம் கலவையான பலன்களைத் தரும். தேவையற்ற பயணம் ஏற்படலாம். பழைய நோய் மீண்டும் தொந்தரவு செய்யலாம். குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். முதலீடுகளில் கவனம் தேவை. மாத இறுதியில் பண வரவு உண்டு.
புதிய நண்பர்கள் கிடைப்பார்கள், அவர்கள் எதிர்காலத்தில் உதவுவார்கள். காதல் வாழ்க்கைக்கு சாதகமான மாதம். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். சொத்து விஷயங்களில் கவனம் தேவை.
பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சொத்து விஷயங்களில் அதிர்ஷ்டம் கூடும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. ஏற்றுமதி-இறக்குமதி செய்பவர்களுக்கு லாபம் கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.