ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிக்காரர்களுக்கு 25 வயதுக்கு முன்பே அரசு வேலை, நல்ல சம்பளம், மற்றும் சிறப்பான திருமண வாழ்க்கை போன்ற பாக்கியங்கள் அமைகின்றன. இந்த 3 ராசிக்காரர்கள் இளம் வயதிலேயே ஒரு முழுமையான வாழ்க்கையை அடைகிறார்கள்.
பொதுவாகவே "கஷ்டப்பட்டு உழைச்சாதான் பிற்காலத்துல வாழலாம்" என்று சொல்வார்கள். ஆனால், ஜோதிட சாஸ்திரத்தின்படி சில ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே அதிர்ஷ்டக் காற்று வீசும். 25 வயதை எட்டுவதற்கு முன்பே அரசு வேலை, கைநிறையச் சம்பளம், அழகான திருமண வாழ்க்கை என ஒரு 'கம்ப்ளீட்' செட்டில்மென்ட்டைப் பார்க்கும் அந்த 3 அதிர்ஷ்ட ராசிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
25
ரிஷபம் (Taurus) - உழைப்பால் உயரும் சொகுசு மன்னர்கள்
ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்போதுமே வாழ்க்கையை ராஜபோகமாக வாழ வேண்டும் என்ற ஆசை அதிகம். ஆசைப்பட்டதோடு நிற்காமல், அதை அடையத் தீவிரமாக உழைப்பார்கள். இவர்களின் விடாமுயற்சி 24 அல்லது 25 வயதிலேயே ஒரு நிலையான வருமானத்தைத் தேடித்தரும். குடும்பத்தின் மீது அதிகப் பற்றுள்ளவர்கள் என்பதால், சரியான வேலையைத் தேடிக்கொண்டு இளம் வயதிலேயே இல்லற வாழ்க்கையிலும் நுழைந்து விடுவார்கள்.
35
கன்னி (Virgo) - திட்டமிட்டு ஜெயிக்கும் புத்திசாலிகள்
கன்னி ராசிக்காரர்கள் அறிவாற்றலிலும், எதையும் கச்சிதமாகத் திட்டமிடுவதிலும் வல்லவர்கள். இவர்களது கூர்மையான புத்தியும், போட்டித் தேர்வுகளில் காட்டும் கவனமும் இவர்களுக்கு சீக்கிரமே அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும். தேவையற்ற செலவுகளைக் குறைத்து, புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதால் 20-களின் தொடக்கத்திலேயே இவர்களது வங்கி இருப்பு வலுவாக இருக்கும். இதனால், இளம் வயதிலேயே அரசு வேலைகள் கிடைக்கும். திருமணமும் சீக்கிரமே நடக்கும்.
மகர ராசியினர் பிறந்ததிலிருந்தே ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருப்பார்கள். நேரம் தவறாமை" மற்றும் "கடின உழைப்பு" தான் இவர்களின் தாரக மந்திரம். சிஸ்டமேட்டிக்காக வேலை செய்வதால், உயர் அதிகாரிகள் இவர்களை எளிதில் அடையாளம் கண்டு பதவி உயர்வு தருவார்கள். 23 முதல் 25 வயதிற்குள் இவர்களுக்குத் திருமண யோகம் கூடிவரும். எதற்கும் பதறாமல் பொறுமையாகக் காத்திருந்து காய் நகர்த்தி வெற்றிக்கனியைப் பறிப்பார்கள்.
55
வெற்றியாளருக்கான செய்தி
இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டினாலும், அந்தக் கதவைத் திறந்து உள்ளே செல்வது உங்களின் உழைப்பு மட்டும்தான். ஜோதிடம் சொல்லும் பாதையை உழைப்பு என்ற வாகனத்தைக் கொண்டு கடந்தால் வெற்றி நிச்சயம்.