Mercury Transit : சித்ரா பௌர்ணமி நாளில் புதன் அஸ்தமனம்.! இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட், பண மழை கொட்டப் போகுது.!

Published : Apr 30, 2026, 11:59 AM IST

Mercury Set 2026 : இந்த வருடம் சித்ரா பௌர்ணமி அன்று புதன் கிரகத்தின் நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. கிரகங்களின் இளவரசனான புதனின் மாற்றம் சில ராசிகளுக்கு அபரிமிதமான லாபத்தை கொடுக்க இருக்கிறது.

PREV
15
Mercury Transit

வேத ஜோதிடத்தின்படி கிரகங்கள் அவ்வபோது அஸ்தமன நிலையை அடைகின்றன. அந்த வகையில், மே 1 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி நாளில் புதன் பகவான் அஸ்தமன நிலையை அடைய இருக்கிறார். புதன் பகவான் சஞ்சாரம் சில ராசிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். புதன் சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிகளுக்கு லாபம் கிடைக்கப் போகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

25
கடகம்

சித்ரா பௌர்ணமி அன்று நிகழும் புதனின் இடமாற்றம், கடக ராசிக்காரர்களுக்குப் சுப பலன்களைத் தர உள்ளது. வேலை செய்பவர்களுக்கு அவர்களின் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு சில நல்ல செய்திகள் வரலாம். நிதி ஆதாயத்திற்காக நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நல்ல நேரத்தைச் செலவிடுவீர்கள். உங்கள் குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

35
சிம்மம்

சித்ரா பௌர்ணமி அன்று நடக்கும் புதன் சஞ்சாரம், சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. நீங்கள் பெரிய முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறுவீர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வரலாம். உங்கள் துணையிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும். குடும்பத்துடன் ஒரு சுற்றுலா செல்லவும் திட்டமிடலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

45
மகரம்

சித்ரா பௌர்ணமி அன்று புதனின் நிலை மாற்றம், மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணப்புழக்கமும் நன்றாக இருக்கும். உங்கள் தொழில் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலனைத் தரும். தொழில் வல்லுநர்களுக்கு லாபகரமான ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்புள்ளது. திருமணமானவர்களுக்கு வாழ்க்கை ரொமான்டிக்காக மாறும். பணியிடத்தில் உங்கள் மேலாளர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும்.

55
பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

Read more Photos on
click me!

Recommended Stories