Astrology: பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா ஜூன் 2026-ம் மாதத்திற்கான சில கணிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் 5 ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைய போவதாகவும் ஜாக்பாட் அடிக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
உலக புகழ்பெற்ற பல்கேரிய நாட்டை சேர்ந்தவரும், ஆன்மீக ஞானியும், தீர்க்கதரிசியுமான பாபா வங்கா. இவர் கண்பார்வையற்றவர். இவர், எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் ஆற்றல் மிக்கவர். பாபா வங்கா 1996-ம் ஆண்டு தனது 85-வது வயதில் மறைந்த போதிலும் அவரின் கணிப்புகள் அப்படியே துல்லியமாக நடந்து உலகை நாடுகளை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா ஜூன் 2026-ம் மாதத்திற்கான சில கணிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, 5 ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைய போவதாகவும் அவர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
26
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஜூன் மாதம் பொருளாதார ரீதியாகப் புதிய உச்சத்தைத் தொடப்போகிறது. நீண்ட நாட்களாக முடங்கி கிடந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். உங்கள் கரியரில் புதிய பாதைகள் திறக்கும். குடும்பத்தில் இருந்த பழைய மனக்கசப்புகள் நீங்கி, அமைதி நிலவும் வேலை பார்ப்பவர்களுக்குப் புதிய பதவிகளும், கூடுதல் பொறுப்புகளும் தேடி வரும். தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
கன்னி ராசியினருக்குப் படிப்பிலும் சரி, செய்யும் தொழிலிலும் சரி, இந்த மாதம் தொட்டதெல்லாம் துலங்கும். சொந்தமாக வீடு அல்லது பிளாட் வாங்க வேண்டும் என்ற உங்களது நீண்ட நாள் ஆசை இந்த மாதத்தில் நிறைவேறும். பழைய நண்பரின் சந்திப்பு மன அழுத்தத்தைக் குறைத்து, உங்களுடைய தன்னம்பிக்கையை இரட்டிப்பாக்கும். நீங்கள் முன்பு செய்த முதலீடுகள் மூலம் இப்போது கணிசமான லாபத்தைக் காண்பீர்கள். வேலையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான கதவுகள் திறக்கும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஜூன் மாதம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் மாதமாக அமையப்போகிறது. நீதிமன்றத்தில் இழுபறியாக இருந்த சட்ட வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். தம்பதிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். குடும்பத்தோடு ஆன்மீகப் பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும். வியாபாரம் செழித்து, பழைய கடன்கள் தீரும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல வேலை கிடைக்கும்.
மகர ராசியினரின் அதிர்ஷ்ட நட்சத்திரம் இந்த மாதத்தில் உச்சம் தொடப்போகிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பெரிய பொறுப்புகளும், அதற்கேற்ற சம்பள உயர்வும் நிச்சயம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாகச் சுற்றுலா சென்று வருவீர்கள். மனதிற்குள் ஒரு பெரிய நிம்மதியும், திருப்தியும் உண்டாகும். நீண்ட நாட்களாக உங்களைத் துரத்திய உடல்நலப் பிரச்சினைகள் முற்றிலும் நீங்கும்.
66
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுக்க மகிழ்ச்சியான செய்திகள் வந்தவண்ணம் இருக்கும். சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் அந்தஸ்தும் உயரும். பிரியமான பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். உங்கள் காதல் வாழ்க்கையில் இனிப்பான செய்திகள் வரலாம். நிதி நிலைமை கிடுகிடுவென உயர்வதால், ஒரு சொகுசான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை இந்த மாதத்தில் நீங்கள் அனுபவிப்பீர்கள். திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.