வாஸ்து சாஸ்திரங்களின் படி, உங்களுடைய வீட்டில் யாருக்காவது மோசமான வகையில் நோய் ஏற்பட்டால் அது கெட்ட கண் திருஷ்டியாக இருக்கலாம். இதனால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இவர்களுடைய படுக்கைக்கு அருகாமையில் ஒரு கிண்ணத்தில் கல் உப்பு போட்டு வைப்பது நல்லது. இதை வைக்கும்போது ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நீங்கள் வைக்கும் படுக்கைக்கு அருகில் இருக்கும் திசை வடக்கு நோக்கி இருப்பது முக்கியம். இப்படி செய்வதால் உங்களுடைய குடும்பத்திலுள்ள நோயாளி மெல்ல குணமடைவார். விரைவில் முழுவதுமாக அந்த நோயிலிருந்தும் குணமடையவும் வாய்ப்புள்ளது. ஆனால் மருத்துவரையும் நீங்கள் அணுகி அடுத்தடுத்த விவரங்களை கேட்க வேண்டும்.