500 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அதிசயம்: ஒரே நேரத்தில் உருவாகும் இரட்டை ராஜயோகங்கள்.! அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.!

Published : Jan 08, 2026, 10:19 AM IST

Hans and Malavya Rajyog 2026:500 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்ச மகாபுருஷ யோகங்களில் முக்கியமான ஹன்ஸ் மற்றும் மாளவ்ய ராஜயோகம் 2026 ஆம் ஆண்டில் ஒரே நேரத்தில் உருவாக உள்ளது. அது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்க்கலாம். 

PREV
15
Hans and Malavya Rajyog 2026

2026 ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசிக்கு பிரவேசிக்கிறார். அதே போல் மார்ச் 2 சுக்கிர பகவான் தனது உச்ச ராசியான மீன ராசியில் சஞ்சரிக்கிறார். குரு பகவான் தனது உச்ச ராசியில் சஞ்சரிப்பது ஹன்ஸ் ராஜயோகத்தையும், சுக்கிர பகவான் தனது உச்ச ராசியான மீனத்தில் சஞ்சரிப்பது மாளவ்ய ராஜயோகத்தையும் உருவாக்குகிறது. இந்த இரட்டை யோகங்களால் சில ராசிகள் பெரும் மாற்றங்களை சந்திக்க இருக்கின்றனர். அது குறித்து இங்கு பார்க்கலாம்.

25
கடகம்

கடக ராசியின் லக்னத்திலேயே குரு பகவான் உச்சம் பெற்று யோகத்தை உருவாக்குவதால் ஜூன் மாதம் தொடங்கி கடக ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல திருப்ப முனைகளை சந்திக்க இருக்கின்றனர். மேலும் மாளவ்ய ராஜயோகமும் இணையும் பொழுது அவர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாக மாறவுள்ளது. நிதி நிலைமை தொடங்கி வாழ்க்கையின் அனைத்து கட்டத்திலும் கடக ராசியினர் வெற்றியை மட்டுமே ருசிக்க இருக்கின்றனர். திருமண வாழ்க்கையில் இருந்து வந்த தகராறுகள் தீர்க்கப்பட்டு அமைதி நிலவும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தடைபட்ட காரியங்கள் மீண்டும் வேகம் எடுக்கும்.

35
கன்னி

கன்னி ராசியின் ஏழாவது வீட்டில் மாளவ்ய ராஜயோகமும், 11 வது வீட்டில் ஹன்ஸ் ராஜயோகமும் உருவாக இருக்கிறது. ஏழாவது வீடு களத்திர ஸ்தானம் என்றும் பதினோராவது வீடு லாப ஸ்தானம் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே இந்த காலகட்டத்தில் கன்னி ராசியினர் வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காண்பீர்கள். இரட்டை யோகங்களால் தொழிலில் மகத்தான வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டத்தில் முழு ஆதரவும் கிடைப்பதால் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குறிப்பாக மாணவர்கள், அரசு வேலைக்கு தயாராகி வருபவர்களுக்கு முன்னேற்றம் காணப்படும். உடல் நலக் கோளாறுகள் அனைத்தும் நீங்கி ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

45
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இரட்டை யோகங்கள் பொருளாதார ரீதியான மாற்றங்களை தர இருக்கிறது. மிதுன ராசிக்காரர்களின் தொழிலில் இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் விலகும். சிறிதாக தொழில் செய்து வருபவர்கள் பிற இடங்களுக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். புதிய கிளைகள் தொடங்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் உண்டாகும். குடும்பத்தில் தடைபட்டு நின்ற சுப நிகழ்ச்சிகள் மீண்டும் வேகமெடுக்கும். கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் காலம் நெருங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம் உண்டு.

55
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த இரட்டை யோகங்கள் தொழில் ரீதியாக சுப பலன்களத் தர இருக்கிறது. பணியிடத்தில் பதவி உயர்வு ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம். எதிரிகளிடமிருந்து எதிர்ப்புகள் விலகி நிம்மதி கிடைக்கும். உங்களை எதிர்ப்பவர்கள் வீழ்ந்து போவார்கள். தேங்கி கிடந்த பணம் வசூலாகும். பழைய கடன்கள் கைக்கு வந்து சேரும். கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்கள் அதிலிருந்து முழுமையான விடுதலைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் பல்வேறு திருப்புமுனைகளை சந்திக்கும் சூழல் ஏற்படும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக அமையும். குழந்தைகள் மூலம் லாபம் கிடைக்கும். அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. குழந்தைகள் படிப்பில் முன்னேற்றத்தை அடைவார்கள். தொழில் செய்து வருபவர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories