Mars Moon Conjunction Predictions in Tamil : ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சந்திரன் இணைவதால் உண்டாகும் சந்திர மங்கள யோகம், ஒருவரை கோடீஸ்வரராக மாற்றும் வல்லமை கொண்டது. இந்த மகாலட்சுமி ராஜயோகத்தின் முழு பலன்கள் மற்றும் பரிகாரங்கள் இதோ
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. விவசாயம் சார்ந்து உண்மையும் கூட. தை பிறந்தால் கண்டிப்பாக வழி பிறக்கும். அப்படி தை மாதம் பிறந்த உடன் ஜன 18 ஆம் தேதி செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்க்கையானது நிகழ்கிறது. இந்த சேர்க்கையானது மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகிறது. அப்படி நிகழும் சந்திரன் மற்றும் செவ்வாய் சேர்க்கையானது முக்கியமாக 3 ராசியினருக்கு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. அந்த 3 ராசியினர் யார் யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
25
Chandra Mangala Yogam benefits in Tamil
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வரும் ஜனவரி 18ஆம் தேதி செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இந்த ஆண்டில் உருவாகும் முதல் ராஜயோகம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 18 மாதங்களுக்குப் பிறகு நிகழும் இந்த யோகம் செல்வ செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் மரியாதையைத் தரும் ஒரு யோகத்தை உருவாக்குகிறது.
35
செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்க்கை - மேஷ ராசி
ஜனவரி 18ல் நிகழும் செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் மேஷ ராசிக்கு மங்களகரமானது. புதிய வருமான வழிகள் உருவாகும். நீண்டகாலமாக வராத பணம் திரும்பக் கிடைக்கும். பதவி உயர்வு, முக்கிய வாய்ப்புகள் வரலாம். மேஷ ராசியினருக்கு கடந்த சில மாதங்களாக இருந்து வந்த பொருளாதார நெருக்கடி வரும் 18ஆம் தேதிக்கு பிறகு நீங்கும்.
நீண்ட நாட்களாக வராமலிருந்த பணம் திரும்ப கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். அதிகார பதவியும் தேடி வரும். பிஸினஸில் புதிய முயற்சிகள் கைகொடுக்கும். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது ஏற்ற காலகட்டம். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஷேர் மார்க்கெட் லாபம் கொடுக்கும்.
45
செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்க்கை - ரிஷப ராசி
ரிஷப ராசியினருக்கு ஜனவரி 18ஆம் தேதி நிகழக் கூடிய செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் திருப்புமுனையை ஏற்படுத்தும் காலமாக அமையப்போகிறது. ஜோதிடத்தில் ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். வசதி வாய்ப்பு, ஆடம்பரம் ஆகியவற்றிற்கு காரகனான சுக்கிரன் உங்களது ராசிக்கு அதிபதி என்பதால் இந்த மகாலட்சுமி ராஜயோகம் உங்களுக்கு இரட்டிப்பு பலனை தரும்.
புதிதாக வீடு, வண்டி, வாகனம் வாங்கும் காலகட்டம். சொந்தமாக பிஸினஸ் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வெளிநாடு, வெளியூர் சென்று வருவீர்கள். தீராத கடன் தீரும். கையில் காசு, பணம் இருந்து கொண்டே இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கை கூடும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
55
செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்க்கை - மகர ராசி
மகர ராசியினருக்கு வரும் 18ஆம் தேதி நிகழக் கூடிய செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்க்கையானது மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகிறது. அப்படி உருவாகும் ராஜயோகம் மகர ராசியினருக்கு வாழ்க்கையின் புதிய தொடக்கமாக அமைய போகிறது. நினைத்தது நிறைவேறும் காலகட்டம். தொழிலை விரிவுபடுத்தலாம்.
புதிய தொழில் ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சனி பகவானின் ஆதிக்கம் நிறைந்த இரும்பு, சிமெண்ட் மற்றும் கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்க பெறும். அரசு வழி காரியங்கள் அனுகூலமாக முடியும். அரசு வழியில் டெண்டர்கள் கிடைக்க பெறலாம்.