Astrology: குருவுடன் கைகோர்த்த சுக்கிரன்.! உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் கோடிகளை குவிக்கப் போகும் 3 ராசிகள்.!

Published : Oct 31, 2025, 11:38 AM IST

Kendra drishti Yoga 2025: நவம்பர் 3 அன்று குரு பகவானும், சுக்கிர பகவானும் இணைந்து உருவாக்கும் ‘கேந்திர திருஷ்டி யோகம்’ பற்றியும், அதனால் பலன் பெறும் ராசிகள் குறித்தும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

PREV
15
குரு சுக்கிரன் சேர்க்கை

ஜோதிடத்தில் ஒரு கிரகம் இருக்கும் இடத்திலிருந்து 1,4,7,10 ஆகிய வீடுகள் ‘கேந்திர ஸ்தானங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த கேந்திர வீடுகளில் இரண்டு முக்கிய கிரகங்கள் ஒன்றுக்கொன்று 90 டிகிரி கோணத்தில் அல்லது எதிர் எதிர் கோணத்தில் 180 டிகிரி கோணத்தில் நின்று பார்க்கும் பொழுது ‘கேந்திர திருஷ்டி யோகம்’ உருவாகிறது. குறிப்பாக குரு மற்றும் சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் இந்த யோகத்தை உருவாக்கும் பொழுது அதன் பலன்கள் மிகவும் சுபமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் அமைகின்றன.

25
கேந்திர திருஷ்டி யோகத்தின் பலன்கள்

நவம்பர் 3, 2025 அன்று குரு பகவானும் சுக்கிர பகவானும் ஒன்றுக்கொன்று கேந்திர ஸ்தானங்களில் சஞ்சரித்து வலுவான கேந்திர திருஷ்டி யோகத்தை உருவாக்குகின்றனர். குரு பகவான் ஞானம், கல்வி, செல்வம், சுப நிகழ்வுகள், குழந்தைகள், அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். சுக்கிர பகவான் காதல், திருமணம், ஆடம்பரம், வசதிகள், கலை, அழகு, பணம், வாகனம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். இந்த இரண்டு சுப கிரகங்களின் பார்வை காரணமாக சில ராசிக்காரர்கள் வாழ்வில் செழிப்பு, மகிழ்ச்சி, உறவுகளில் நல்லிணக்கம் ஆகியவற்றைப் பெற உள்ளனர். அவர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

35
ரிஷபம்
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. வருமானத்திற்கான புதிய கதவுகள் திறக்கும். எதிர்பாராத பணம் வந்து சேரும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். 
  • பணியிடத்தில் இருந்து வந்த வேலைப்பளு, மன அழுத்தங்கள் குறையும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். 
  • குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். தடைபட்டு நின்று போன சுபகாரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். திருமண முயற்சிகள் எடுப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். 
  • நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடலாம். அவை லாபகரமானதாகவும், மன நிறைவு தருவதாகவும் இருக்கும்.
45
துலாம்
  • துலாம் ராசிக்காரர்களுக்கு கேந்திர திருஷ்டி யோகம் பல வழிகளில் நன்மையை அளிக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நேர்மறையான பலன்கள் கிடைக்கும். 
  • பணியிடத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். சமூகத்தில் அந்தஸ்தும், கௌரவமும் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் உருவாகி எதிர்காலத்தில் நன்மை அளிக்கும். 
  • பெற்றோர்கள் அல்லது மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும். வீடு மற்றும் குடும்ப விஷயங்களில் நல்லிணக்கம் ஏற்படும். மன அமைதி உண்டாகும். வீட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். 
  • புதிய சொத்துக்கள் அல்லது வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடும். உயர்கல்வி, ஆராய்ச்சி தொடர்பான நடவடிக்கைகளில் இருப்பவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
55
தனுசு
  • தனுசு ராசிக்காரர்களுக்கு ‘கேந்திர திருஷ்டி யோகம்’ எதிர்பாராத நிதி ஆதாரங்களை வழங்க உள்ளது. வங்கி கையிருப்பு இரட்டிப்பாக மாறுவதற்கான காலம் நெருங்கியுள்ளது. 
  • நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். 
  • வேலை தேடி வருபவர்களுக்கு நல்ல இடத்தில் கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளை வீழ்த்தி துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றியைப் பெறுவீர்கள். 
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை கொண்டு வரும். தொழில் செய்து வருபவர்களுக்கு வியாபாரம் பெருகும். 
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் நல்ல வரன் அமைய வாய்ப்பு உள்ளது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories