தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போனது என்பது பாடல் உங்கள் ராசிக்கு 4 ஆம் வீடான சுக ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்வதால் சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். குருபகவான் 8, 10, 12, ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார் உங்களை அவதூறு செய்தவர்கள், உங்களை வைத்து பணமோசடி செய்தவர்கள் எல்லாம் இனி நாடி வரும் காலம். பத்தாம் பாவத்தை குரு பார்ப்பதால் இது வரை நலிவுற்ற தொழில் வளர்ச்சி அடையும். இதுவரை முடங்கிய வியாபாரம் இனி வளர்ச்சியடையும் லாபத்தை தரப்போகிறது. உத்யோக உயர்வு பதவி உயர்வு தேடி வரப்போகிறது. 12 ஆம் பாவத்தை குரு பார்ப்பதால் இதுவரை தூக்கம் இல்லாமல் நிம்மதியை தொலைத்தவர்கள் இனி நிம்மதியாக உறங்குவீர்கள்.